சினிமா செய்திகள்

‘பிக்பாஸ்’ நடிகைக்கு கொரோனா + "||" + Corona to ‘Big Boss’ Actress

‘பிக்பாஸ்’ நடிகைக்கு கொரோனா

‘பிக்பாஸ்’ நடிகைக்கு கொரோனா
‘பிக்பாஸ்’ நடிகைக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.
பிரபல பஞ்சாப் மொழி நடிகை ஹிமான்ஷி குரானா. இவர் பாடகியாகவும் இருக்கிறார். இந்தி பிக்பாஸ் 13-வது சீசனில் பங்கேற்றும் பிரபலமானார். ஹிமான்ஷி குரானாவுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இவர் வேளாண் சட்டங்களை கண்டித்து மத்திய அரசுக்கு எதிராக நடந்த போராட்டத்தில் விவசாயிகளுடன் பங்கேற்று வந்தார். பின்னர் படப்பிடிப்புக்கு செல்வதற்காக கொரோனா பரிசோதனை செய்து கொண்டார். அப்போது அவருக்கு நோய் தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெறுகிறார்.

ஹிமான்ஷி குரானா தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள பதிவில், “நான் தேவையான முன் எச்சரிக்கையோடு இருந்தும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. நான் பங்கேற்ற போராட்டத்தில் கூட்டம் அதிகமாக இருந்தது. எனவே படப்பிடிப்புக்கு செல்வதற்கு முன்னால் பரிசோதனை செய்து கொண்டதில் தொற்று இருப்பது தெரிய வந்தது. என்னுடன் தொடர்பில் இருந்த அனைவரும் பரிசோதனை செய்து கொள்ளுங்கள். போராட்டத்தில் தேவையான முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். நாம் நோய் தொற்று காலத்தில் இருக்கிறோம் என்பதை மறக்க வேண்டாம்” என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. அமெரிக்க துணை ஜனாதிபதியின் அரசியல் ஆலோசகர் உள்பட 5 பேருக்கு கொரோனா பாதிப்பு
அமெரிக்க துணை ஜனாதிபதி மைக் பென்சின் அரசியல் ஆலோசகர் உள்பட 5 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.
2. போலந்து அதிபருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
போலந்து நாட்டு அதிபர் ஆண்டிரெஜ் துதாவுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.
3. பிரான்சில் தொடர்ந்து உயர்வு; 10 லட்சம் கடந்தது கொரோனா பாதிப்பு
பிரான்சில் தொடர்ந்து உயர்ந்து வரும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 10 லட்சம் கடந்துள்ளது.
4. கொரோனா பாதிப்பு: அமெரிக்காவில் வரும் பிப்ரிவரிக்குள் 5 லட்சம் பேர் பலியாக கூடும்; ஆய்வு முடிவு
அமெரிக்காவில் ஒவ்வொருவரும் முக கவசங்கள் அணிவதன் வழியே 1.3 லட்சம் உயிர்களை பாதுகாக்கலாம் என்று ஆய்வு முடிவு தெரிவித்து உள்ளது.
5. கொரோனா பாதிப்புகளால் மோசமடைந்து வருகிறது பாகிஸ்தான்
கொரோனா பாதிப்புகளால் பாகிஸ்தானின் நிலைமை மோசமடைந்து வருகிறது என அந்நாட்டு தேசிய ஆணை மற்றும் செயல் மையம் தெரிவித்து உள்ளது.