சினிமா செய்திகள்

14 வருடங்களுக்கு முன்பு பார்த்த அதே அழகுடன் “அனுஷ்கா அற்புதமான நடிகையாகி விட்டார்”நடிகர் மாதவன் பேட்டி + "||" + Anushka has become an amazing actress

14 வருடங்களுக்கு முன்பு பார்த்த அதே அழகுடன் “அனுஷ்கா அற்புதமான நடிகையாகி விட்டார்”நடிகர் மாதவன் பேட்டி

14 வருடங்களுக்கு முன்பு பார்த்த அதே அழகுடன் “அனுஷ்கா அற்புதமான நடிகையாகி விட்டார்”நடிகர் மாதவன் பேட்டி
“அனுஷ்கா, 14 வருடங்களுக்கு முன்பு பார்த்த அதே அழகுடன் இருக்கிறார். இத்தனை வருடங்களில் அவர் அற்புதமான நடிகையாகி விட்டார்” என்று நடிகர் மாதவன் கூறினார்.
பேட்டி

நடிகர் மாதவன், சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

“அனுஷ்காவும், நானும் முதன்முதலாக ‘இரண்டு’ படத்தில் ஜோடியாக நடித்தோம். அந்த படத்தில் அவ்வளவு அழகாக இருப்பார். அப்போது அவர் சினிமாவுக்கு புதுசு. 14 வருடங்கள் கழித்து நாங்கள் இருவரும் ‘சைலென்ஸ்’ படத்தில் இணைந்து நடித்து இருக்கிறோம். அனுஷ்காவிடம் அதே அழகு. அவருடைய தோற்றத்தில் எந்த மாற்றமும் இல்லை. பதினான்கு வருடங்களில் அவர் அற்புதமான நடிகையாகி விட்டார்.


சினிமா மீது அவருக்கு இருக்கும் அக்கறை, அனுபவம், கதை சரியாக நகர்கிறதா? என்று கேட்டு தெரிந்து கொள்வதை எல்லாம் பார்த்தபோது ரொம்பவே பெருமைப்பட்டேன். ‘பாகுபலி’க்கு பிறகு பெரிய நடிகையாகி விட்டார். என்றாலும் அவரிடம் பந்தா இல்லை.

சினிமா வேறு ஒரு வடிவத்துக்கு மாறியிருக்கிறது. ஓ டி டி தளங்கள் புதிய மாற்றமாக வரப்போகிறது என்பது 10 வருடங்களுக்கு முன்பே தெரியும். அதை சுதா கொங்கராவிடம் சொன்னபோது, முதலில் அவர் நம்பவில்லை. இப்போது, “எப்படிடா சொன்னே?” என்று கேட்கிறாள்.

ஓ டி டியில் நிறைய பேர் பணிபுரிய தொடங்கி விட்டார்கள். மணிரத்னமே ஓ டி டிக்கு வந்து விட்டார். எதிர்காலம் எப்படியிருக்கும்? என்ற கேள்வியும், பயமும் எல்லோருக்கும் இருக்கிறது. அனைத்தையும் துணிச்சலுடன் கையாள வேண்டும்.”

இவ்வாறு மாதவன் கூறினார். படப்பிடிப்பை மீண்டும் தொடங்கி உள்ளனர்.