சினிமா செய்திகள்

உண்மை கதையில் பிரியாமணி + "||" + In the true story acting in film actress priyamani

உண்மை கதையில் பிரியாமணி

உண்மை கதையில் பிரியாமணி
உண்மை சம்பவத்தை மையமாக வைத்து தயாராகும் சயனைடு படத்தில் பிரியாமணி நடிக்கிறார்.
கர்நாடக மாநிலம் பண்ட்வால் பகுதியை சேர்ந்த மோகன்குமார் 2003-ம் ஆண்டு முதல் 2009 வரை வனத்துறையில் பணியாற்றுவதாக பொய் சொல்லி 20 பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து பிறகு கருத்தடை மாத்திரை என்ற பெயரில் சயனைடு கலந்த மாத்திரைகளை கொடுத்து கொன்ற சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கோர்ட்டில் இவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இந்த சம்பவத்தை வைத்தே சயனைடு படத்தை எடுக்கின்றனர். டச்ரிவர் இயக்குகிறார். இவர் சில தெலுங்கு மற்றும் குறும்படங்களை இயக்கி உள்ளார். இந்த படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், தெலுங்கு, இந்தி மொழிகளில் தயாராகிறது.


படம் குறித்து இயக்குனர் கூறும்போது, “20 பெண்களை காதல் பெயரால் ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தவன் வாழ்க்கையை படமாக எடுக்கிறோம். ஜனவரியில் படப்பிடிப்பு தொடங்குகிறது. இதில் பிரியாமணி சக்தி வாய்ந்த போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார்” என்றார்.

தொடர்புடைய செய்திகள்

1. திகில் கதையில் பிரியாமணி
திகில் கதையில் நடிகை பிரியாமணி நடிக்க உள்ளார்.