சினிமா செய்திகள்

கதை சர்ச்சையால் கைவிட்ட பாலாவின் ‘வர்மா’ ஓ.டி.டி.யில் ரிலீஸ் + "||" + The story is abandoned by controversy Bala Varma Release in OTT

கதை சர்ச்சையால் கைவிட்ட பாலாவின் ‘வர்மா’ ஓ.டி.டி.யில் ரிலீஸ்

கதை சர்ச்சையால் கைவிட்ட பாலாவின் ‘வர்மா’ ஓ.டி.டி.யில் ரிலீஸ்
நடிகர் விக்ரம் மகன் துருவ் விக்ரம் கதாநாயகனாக அறிமுகமானார். படம் ‘வர்மா’ இந்த படத்தை பாலா டைரக்டு செய்தார்.
தெலுங்கில் வெற்றிகரமாக ஓடிய படம் அர்ஜுன் ரெட்டி. இந்த படத்தை தமிழில் வர்மா என்ற பெயரில் ரீமேக் செய்தனர். இதில் நடிகர் விக்ரம் மகன் துருவ் விக்ரம் கதாநாயகனாக அறிமுகமானார். இந்த படத்தை பாலா டைரக்டு செய்தார். இதனால் படத்துக்கு பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டது. கதையில் பாலா சில மாற்றங்கள் செய்ததாக கூறப்படுகிறது. படப்பிடிப்பு முடிந்து படத்தை பார்த்தபோது தயாரிப்பாளருக்கு பிடிக்கவில்லை. ஒரிஜினல் கதையை மாற்றியதால் படம் நன்றாக இல்லை என்று அதிருப்தி வெளியிட்டார். இதனால் படத்தை கைவிடுவதாக பட நிறுவனம் அறிவித்தது. பின்னர் பாலாவுக்கு பதிலாக கிரிசாயா என்பவரை இயக்குனராக வைத்து ஆதித்ய வர்மா என்ற பெயரில் மீண்டும் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. பாலா இயக்கிய படத்தில் இருந்து எந்த காட்சியையும் பயன்படுத்தாமல் படத்தை எடுத்தனர். துருவ் தோற்றத்தையும் மாற்றினர். கதாநாயகிகளாக பனிட்டா சந்து, பிரியா ஆனந்த் ஆகியோர் நடித்தனர். இந்த படம் கடந்த நவம்பர் மாதம் திரைக்கு வந்து ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.


இந்த நிலையில் பாலா இயக்கிய ஆதித்ய வர்மாவை ஓ.டி.டி. தளத்தில் வெளியிட பேச்சுவார்த்தைகள் நடந்தன. தற்போது வருகிற 6-ந்தேதி ஓ.டி.டி தளத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.