சினிமா செய்திகள்

மெலிந்த தேகத்தில் வைரலாகும் சஞ்சய்தத் புதிய புகைப்படம் + "||" + Sanjay's new photo goes viral in the slim reservoir

மெலிந்த தேகத்தில் வைரலாகும் சஞ்சய்தத் புதிய புகைப்படம்

மெலிந்த தேகத்தில் வைரலாகும் சஞ்சய்தத் புதிய புகைப்படம்
பிரபல இந்தி நடிகர் சஞ்சய்தத்துக்கு தற்போது 61 வயது ஆகிறது.
பிரபல இந்தி நடிகர் சஞ்சய்தத்துக்கு தற்போது 61 வயது ஆகிறது. இவருக்கு இரு மாதங்களுக்கு முன்பு மூச்சுத்திணறல் ஏற்பட்டு மும்பை ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். பரிசோதனையில் அவருக்கு நுரையீரல் புற்றுநோய் பாதிப்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து சினிமாவை விட்டு தற்காலிகமாக விலகுவதாக அறிவித்தார். இது பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது சஞ்சய்தத் புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த நிலையில் அவரது புதிய புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. அதில் சஞ்சய்தத் மெலிந்து காணப்படுகிறார். கன்னங்கள் ஒட்டி உள்ளன. தேகத்தில் பழைய மிடுக்கு இல்லாமல் பலவீனமாக இருக்கிறார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர். அவர் விரைவில் குணமடைய பிரார்த்தித்து வலைத்தளத்தில் பதிவுகள் வெளியிட்டு வருகிறார்கள்.