சினிமா செய்திகள்

முரளிதரன் வாழ்க்கை கதையில் நடிக்க விஜய் சேதுபதிக்கு வலுக்கும் எதிர்ப்பு + "||" + Strengthening opposition to Vijay Sethupathi

முரளிதரன் வாழ்க்கை கதையில் நடிக்க விஜய் சேதுபதிக்கு வலுக்கும் எதிர்ப்பு

முரளிதரன் வாழ்க்கை கதையில் நடிக்க விஜய் சேதுபதிக்கு வலுக்கும் எதிர்ப்பு
முரளிதரன் வாழ்க்கை கதையில் நடிக்க விஜய் சேதுபதிக்கு வலுக்கும் எதிர்ப்பு
இலங்கை கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை திரைப்படமாக உருவாகிறது. இதில் முரளிதரன் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார். முத்தையா முரளிதரன் சிங்களர்களுக்கு ஆதரவாக இருந்தவர் என்றும், அவரது வாழ்க்கை படத்தில் விஜய் சேதுபதி நடிக்கக்கூடாது என்றும் ஈழ தமிழர் அமைப்புகளும், வெளிநாட்டு தமிழர்களும் சமூக வலைத்தளத்தில் கண்டன பதிவுகளை வெளியிட்டு வருகிறார்கள். விஜய் சேதுபதியை நாயகனாக அறிமுகப்படுத்திய இயக்குனர் சீனுராமசாமியும் டுவிட்டரில் கருத்து பதிவிட்டு இருந்தார்.

இதுகுறித்து சீனுராமசாமி கூறும்போது, “விஜய் சேதுபதி உலக தமிழர்கள் மீது அன்பும், அக்கறையும் கொண்டவர். யாதும் ஊரே யாவரும் கேளிர் படத்தில் ஈழத்தமிழராகவே நடித்து இருக்கிறார். நிறைய பேர் என்னை தொடர்பு கொண்டு, முத்தையா முரளிதரன் சிறந்த விளையாட்டு வீரர். ஆனால் அரசியல் ரீதியாக தமிழர்களுக்கு எதிராக பேசி உள்ளார். அவரது வாழ்க்கை கதையில் விஜய் சேதுபதி நடிப்பதால் மக்கள் அதிருப்தியாக உள்ளனர் என்றனர்.

ஈழத் தமிழர்களை நேசிக்கும் விஜய் சேதுபதியை யாரும் விமர்சனம் செய்யக்கூடாது. அவர் சிந்தித்து முடிவு எடுக்க வாய்ப்பு அளிக்க வேண்டும் என்ற தொனியில் ஒரு தாயைப்போல டுவிட்டரில் பதிவு வெளியிட்டேன்” என்றார்.