சினிமா செய்திகள்

என்னை கொலை செய்து தற்கொலை என்பார்கள் பாலியல் புகார் கூறிய பாயல் கோஷ் அச்சம் + "||" + Fear of Payal Ghosh who murdered me and complained of sexual harassment

என்னை கொலை செய்து தற்கொலை என்பார்கள் பாலியல் புகார் கூறிய பாயல் கோஷ் அச்சம்

என்னை கொலை செய்து தற்கொலை என்பார்கள் பாலியல் புகார் கூறிய பாயல் கோஷ் அச்சம்
தமிழில் தேரோடும் வீதியிலே படத்தில் நடித்துள்ள பாயல் கோஷ் பிரபல இந்தி இயக்குனர் அனுராக் காஷ்யப் மீது பாலியல் புகார் கூறினார்.
தமிழில் தேரோடும் வீதியிலே படத்தில் நடித்துள்ள பாயல் கோஷ் பிரபல இந்தி இயக்குனர் அனுராக் காஷ்யப் மீது பாலியல் புகார் கூறினார். ரிச்சா சத்தா, கியூமா குரோஷி, மஹி கில் உள்பட அனுராக் காஷ்யப் இயக்கிய படங்களில் நடித்துள்ள நடிகைகளும் அவரால் தொல்லைக்கு உள்ளானார்கள் என்றும் குறிப்பிட்டு இருந்தார். ஆனால் அனுராக் காஷ்யப் தங்களிடம் தவறாக நடக்கவில்லை என்று அந்த நடிகைகள் மறுத்தனர்.

ரிச்சா சத்தா மும்பை கோர்ட்டில் பாயல் கோஷ் தனது நற்பெயரை கெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக குற்றம் சாட்டி ரூ.1 கோடி நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடர்ந்தார். டுவிட்டரில் பாயல் கோஷ் வெளியிட்ட பதிவில் ரிச்சா சத்தாவுக்கு எதிராக நான் எதையும் பேசவில்லை. எனது போராட்டம் அனுராக் காஷ்யப்புக்கு மட்டுமே எதிரானது என்று குறிப்பிட்டு இருந்தார்.

தற்போது தன்னை கொலை செய்ய சதி நடப்பதாக தெரிவித்துள்ளார். “என்னை இந்தி பட உலக மாபியாக்கள் கொலை செய்து விடுவார்கள். அந்த கொலையை தற்கொலை என்றும் நிரூபித்துவிடுவார்கள்” என்று பதிவு வெளியிட்டு அதை பிரதமர் மோடி, தேசிய மகளிர் ஆணைய தலைவர் ஆகியோருக்கு டேக் செய்து தன்னை காப்பாற்றுமாறு கோரிக்கை வைத்துள்ளார்.