சினிமா செய்திகள்

கொரோனா பரவலால் காஜல் அகர்வால் திருமணத்தில் மாற்றம் + "||" + Change in Kajal Agarwal's marriage due to corona spread

கொரோனா பரவலால் காஜல் அகர்வால் திருமணத்தில் மாற்றம்

கொரோனா பரவலால் காஜல் அகர்வால் திருமணத்தில் மாற்றம்
கொரோனா பரவலால் நடிகை காஜல் அகர்வாலின் திருமணத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

தமிழில் பொம்மலாட்டம், நான் மகான் அல்ல, மாற்றான், துப்பாக்கி, மாரி, ஜில்லா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள காஜல் அகர்வாலுக்கு திருமணம் முடிவாகி உள்ளது. கவுதம் என்ற தொழில் அதிபரை மணக்கிறார். இவர்கள் திருமணம் வருகிற 30-ந் தேதி மும்பையில் நடக்கிறது.

திருமணத்தை அங்குள்ள நட்சத்திர ஓட்டலில் நடத்த காஜல் அகர்வால் விரும்பினார். தமிழ், தெலுங்கு, இந்தி பட உலகில் தன்னுடன் நடித்த கதாநாயகர்கள் மற்றும் நடிகைகளை அழைக்கவும் முடிவு செய்து இருந்தார். ஆனால் கொரோனா பரவல் குறையாததால் அந்த முடிவை மாற்றி ஓட்டலுக்கு பதிலாக மும்பையில் உள்ள தனது வீட்டிலேயே எளிமையாக திருமணம் செய்துகொள்கிறார்.

நடிகர், நடிகைகளை திருமணத்துக்கு அழைப்பதையும் தவிர்த்துள்ளார். நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொள்கின்றனர். அவர்களும் திருமணத்துக்கு வரும்போது சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும், முககவசம் அணிய வேண்டும், கைகளை அடிக்கடி கழுவ வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. திருமணத்துக்கு வருபவர்களுக்கு காய்ச்சல் இருக்கிறதா? என்று கொரோனா பரிசோதனை செய்யவும் முடிவு செய்துள்ளனர்.


தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா பரவல் தடுப்பு பணி காரணமாக மருதமலை முருகன் கோவிலில் தைப்பூச தேரோட்டம் ரத்து; பக்தர்களுக்கும் தடை
கொரோனா பரவல் தடுப்பு பணி காரணமாக மருதமலை முருகன் கோவிலில் தைப்பூச தேரோட்டம் ரத்து செய்யப்பட்டு உள்ளது. அத்துடன் பக்தர்கள் செல்ல தடையும் விதிக்கப்பட்டு இருக்கிறது.
2. மாநில முதல்-மந்திரிகளுடன், பிரதமர் இன்று ஆலோசனை
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து சில மாநில முதல்-மந்திரிகளுடன், பிரதமர் நரேந்திர மோடி இன்று ஆலோசனை நடத்துகிறார்.
3. கொரோனா பரவலை தடுக்க குளித்தலை கடை உரிமையாளர்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்: விழிப்புணர்வு கூட்டத்தில் போலீசார் அறிவுறுத்தல்
கொரோனா பரவலை தடுக்க குளித்தலை கடை உரிமையாளர்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என விழிப்புணர்வு கூட்டத்தில் போலீசார் அறிவுறுத்தினர்.
4. கொரோனா பரவல் காரணமாக டெல்லியில் பள்ளிகளுக்கு 31-ந்தேதி வரை விடுமுறை
கொரோனா பரவல் காரணமாக டெல்லியில் பள்ளிகளுக்கு வருகிற 31-ந்தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.
5. வேலைக்காக பலர் வெளியே வந்து உள்ளதால் கொரோனா பரவல் 2-வது அலை பற்றிய பயம் நிலவுகிறது முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே பேச்சு
வேலைக்காக பலர் வெளியே வந்து உள்ளதால் கொரோனா பரவல் 2-வது அலை பற்றிய பயம் நிலவுவதாக முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே கூறியுள்ளார்.