சினிமா செய்திகள்

தாமதமாகும் விஜய் படம் + "||" + Delayed Vijay film

தாமதமாகும் விஜய் படம்

தாமதமாகும் விஜய் படம்
நடிகர் விஜய் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு தாமதமாகி வருகிறது.

கொரோனா அச்சுறுத்தலால் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்க உள்ள 65-வது படத்தின் படப்பிடிப்பு தாமதமாகி வருகிறது. இந்த படத்தின் கதையை கொரோனா பரவலுக்கு முன்பே ஏ.ஆர்.முருகதாஸ் தயார் செய்து விஜய்யிடம் சொல்லி ஒப்புதலும் பெற்று விட்டார். மாஸ்டர் படம் ஏப்ரல் மாதம் திரைக்கு வந்ததும் படப்பிடிப்பை தொடங்கி தீபாவளிக்கு திரைக்கு கொண்டு வரும் முடிவில் இருந்தனர். கொரோனா அந்த திட்டத்தை மாற்றிவிட்டது. தற்போது ஊரடங்கை தளர்த்தி படப்பிடிப்புகளுக்கு அரசு அனுமதி வழங்கி உள்ளதால் விஜய் படப்பிடிப்பு தொடங்கப்படலாம் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் படப்பிடிப்பு மேலும் தாமதமாகிறது.

அடுத்த வருடம் ஜனவரி மாதம் இறுதியில் அல்லது பிப்ரவரியில் படப்பிடிப்பை தொடங்கும் முடிவில் இருக்கிறார்கள். படத்தை அடுத்த தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய திட்டமிட்டு உள்ளனர். இந்த படத்தில் விஜய் இரட்டை வேடத்தில் நடிப்பதாகவும், படத்துக்கு ரெட்டை தோட்டா என்று பெயர் வைத்து இருப்பதாகவும் சமூக வலைத்தளத்தில் தகவல் பரவுகிறது. இதனை படக்குழுவினர் உறுதிப்படுத்தவில்லை. இந்த படத்தை முடித்துவிட்டு வெற்றி மாறன் இயக்கத்தில் விஜய் நடிப்பார் என்று தெரிகிறது.