சினிமா செய்திகள்

கொரோனா பாதிப்பு: சம்பளத்தை குறைத்த நயன்தாரா + "||" + Corona vulnerability: Nayanthara who reduced the salary

கொரோனா பாதிப்பு: சம்பளத்தை குறைத்த நயன்தாரா

கொரோனா பாதிப்பு: சம்பளத்தை குறைத்த நயன்தாரா
கொரோனா பாதிப்பு காரணமாக சம்பளத்தை குறைத்த கொண்டார் நயன்தாரா.

கொரோனா பாதிப்பினால் தயாரிப்பாளர்களுக்கு ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்ட நடிகர், நடிகைகள் சம்பளத்தை குறைக்க வேண்டும் என்று தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாள பட உலகில் வற்புறுத்தப்பட்டு உள்ளது. ஏற்கனவே விஜய் ஆண்டனி தான் நடிக்கும் 3 படங்களின் சம்பளத்தில் தலா ஒரு கோடியை குறைத்துக் கொண்டார். இதுபோல் நடிகர் ஹரிஷ் கல்யாண், டைரக்டர் ஹரி உள்ளிட்டோரும் சம்பளத்தை குறைத்தனர். மலையாள நடிகர் மோகன்லால் தற்போது நடித்து வரும் திரிஷ்யம் படத்துக்கு சம்பளத்தை 50 சதவீதம் குறைத்துள்ளார். இதே படத்தில் நடிக்கும் மீனாவும் சம்பளத்தை குறைத்து இருக்கிறார்.

இந்த நிலையில் முன்னணி நடிகையான நயன்தாராவும் தனது சம்பளத்தை குறைத்துள்ளார். மலையாளத்தில் தயாராகும் நிழல் என்ற திகில் படத்தில் நயன்தாராவை கதாநாயகியாக ஒப்பந்தம் செய்துள்ளனர். இதில் கதாநாயகனாக குஞ்சாக்கோ போபன் நடிக்கிறார். இந்த படத்துக்கு சம்பளத்தை நயன்தாரா குறைத்து இருப்பதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். நயன்தாரா தமிழில் ரூ.4 கோடிக்கு மேல் சம்பளம் பெறுகிறார்.

தொடர்புடைய செய்திகள்

1. கேரள சட்டசபை கூட்டத்தில் கலந்து கொண்ட 4 எம்.எல்.ஏ.க்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி
கேரள சட்டசபை கூட்டத்தில் கலந்து கொண்ட 4 எம்.எல்.ஏ.க்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.
2. கேரளாவில் கொரோனா பாதிப்பில் குணமடைந்த எம்.எல்.ஏ. உடல்நல குறைவால் காலமானார்
கேரளாவில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கொங்காடு தொகுதி எம்.எல்.ஏ. உடல்நல குறைவால் காலமானார்.
3. டெல்லியில் மேலும் 161- பேருக்கு கொரோனா தொற்று
டெல்லியில் இன்று புதிதாக 161- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
4. இந்தியாவில் கடந்த 2 நாட்களாக புதிதாக உருமாறிய கொரோனா பாதிப்பு இல்லை: சுகாதாரத்துறை அமைச்சகம்
இந்தியாவில் கடந்த 2 நாட்களாக புதிதாக உருமாறிய கொரோனா பாதிப்பு இல்லை என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
5. பெரம்பலூாில் கொரோனா பாதிப்பு இல்லை
பெரம்பலூாில் நேற்று கொரோனா தொற்றால் யாரும் பாதிக்கப்படவில்லை.