சினிமா செய்திகள்

3-வது கணவரை பிரிந்து விட்டேனா? நடிகை வனிதா விளக்கம் + "||" + Divorced 3rd Husband Actress Vanitha Description

3-வது கணவரை பிரிந்து விட்டேனா? நடிகை வனிதா விளக்கம்

3-வது கணவரை பிரிந்து விட்டேனா? நடிகை வனிதா விளக்கம்
3-வது கணவரை பிரிந்து விட்டேனா என்று நடிகை வனிதா விளக்கம் அளித்துள்ளார்.

நடிகை வனிதா கொரோனா ஊரடங்கில் பீட்டர் பால் என்பவரை 3-வது திருமணம் செய்து கொண்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. இருவரும் சமீபத்தில் கோவா சென்றபோது தகராறு ஏற்பட்டதாகவும் இதையடுத்து பீட்டர் பாலை வீட்டில் இருந்து வனிதா வெளியேற்றி விட்டதாகவும் சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியது. 

இதற்கு விளக்கம் அளித்து வனிதா டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவுகளில் கூறியிருப்பதாவது:-

“நான் ஒரு குடும்பத்தை உடைத்து விட்டேன் என்று நினைப்பவர்களுக்கு.. வீடும் குடும்பமும் இல்லாத ஒருவருடன் இணைந்தேன். எங்களை பற்றி மோசமான விமர்சனங்கள் வந்தன. எதுவும் எங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது என்று நம்பினேன். பின்னர் அவருக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டதும் இழந்து விடுவோமோ என்று பயந்து உடைந்து போனேன். இப்போது நான் இன்னொரு பெரிய சவாலை சந்தித்துள்ளேன். அதை சரிசெய்ய முயற்சித்து வருகிறேன். இதனால் அதிக துயரத்திலும் பயத்திலும் இருக்கிறேன். நான் தேடிய அன்பை இழக்க பயமாக உள்ளது. எனக்கு வாழ்க்கையே போராட்டம் நிறைந்தது. காதலில் தோற்பதும் பழகி விட்டது. அதை கடந்தே வந்து இருக்கிறேன். இன்னும் வலிமையோடு வாழ்வை எதிர்கொள்வேன். காதலில் ஏமாறுவது வலியை தரும். ஒரு கட்டத்துக்கு மேல் மரத்து விடும். இது நடந்திருக்க கூடாது என்று என்னால் சொல்ல முடியாது. வாழ்க்கை என்பது பாடம்தான். உறுதியோடு இதனை எதிர்கொள்வேன். நான் எந்த தவறும் செய்யவில்லை. ஒருவர் மீது அன்பு செலுத்தினேன். இப்போது என் வாழ்க்கை கனவுகள் நொறுங்கி போன சூழலில் இருக்கிறேன். 

இதுவும் கடந்து போகும். என் வாழ்க்கை. துணைமீது பழிபோட விரும்பவில்லை. ஆனாலும் இது நடந்து விட்டது. எனது குழந்தைகளையும் சுற்றி இருப்பவர்களையும் மனதில் வைத்து சரியான முடிவை எடுப்பேன். வேறு எதையும் தெளிவுபடுத்த அவசியம் இல்லை.”