சினிமா செய்திகள்

நான்கு நாட்களுக்கு ஒரு முறை கொரோனா பரிசோதனை செய்ய வேண்டி உள்ளது-பிரீத்தி ஜிந்தா + "||" + Preity Zinta Shares Video Of COVID-19 Test; "Not The Right Way," Say Her Instafam

நான்கு நாட்களுக்கு ஒரு முறை கொரோனா பரிசோதனை செய்ய வேண்டி உள்ளது-பிரீத்தி ஜிந்தா

நான்கு நாட்களுக்கு ஒரு முறை கொரோனா பரிசோதனை செய்ய வேண்டி உள்ளது-பிரீத்தி ஜிந்தா
பிரபல இந்தி நடிகை பிரீத்தி ஜிந்தா ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வரும் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் தனது பஞ்சாப் அணிக்காக சென்று உள்ளார்.

பிரபல இந்தி நடிகை பிரீத்தி ஜிந்தா ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வரும் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் தனது பஞ்சாப் அணிக்காக சென்று உள்ளார். அங்கு அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்ட வீடியோவை சமூக வலைதளத்தில் வெளியிட்டு நான் கொரோனா பரிசோதனைகளின் ராணியாகி விட்டேன் என்று தெரிவித்துள்ளார்.

அவர் கூறியிருப்பதாவது:-

“ஐ.பி.எல். போட்டியின் பாதுகாப்பு வளையத்துக்குள் நான் இருக்கிறேன். இந்த அனுபவம் எப்படி இருக்கிறது என்று பலரும் கேள்வி எழுப்புகிறார்கள். மூன்று நான்கு நாட்களுக்கு ஒரு முறை கொரோனா பரிசோதனை செய்ய வேண்டி உள்ளது. வெளியே போக தடை உள்ளது. 

அறைக்குள் மட்டுமே இருக்க வேண்டும். பஞ்சாப் அணிக்காக உள்ள உணவகம் உடற்பயிற்சி கூடம், கார் மைதானத்துக்கு செல்லலாம். ஓட்டுனர்களும் சமையல்காரர்களும் தனிமையில்தான் உள்ளனர். வெளியில் இருந்து உணவு வாங்கி சாப்பிட அனுமதி இல்லை. சுதந்திரமாக இருக்க முடியாது. எனக்கு 20 தடவை கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.