சினிமா செய்திகள்

பொங்கலுக்கு 4 படங்கள் ரிலீஸ் + "||" + 4 films released for Pongal

பொங்கலுக்கு 4 படங்கள் ரிலீஸ்

பொங்கலுக்கு 4 படங்கள் ரிலீஸ்
பொங்கலுக்கு 4 படங்கள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கொரோனாவால் தீபாவளி பண்டிகையில் பெரிய பட்ஜெட் படங்களை திரைக்கு கொண்டு வர தயங்குகின்றனர். தியேட்டர்களில் சமூக இடைவெளி, பாதிபேருக்கு மட்டுமே டிக்கெட் கொடுக்க வேண்டும் என்ற நிபந்தனை உள்ளிட்ட பல காரணங்களால் பின்வாங்கி இருப்பதாக கூறப்படுகிறது. 

சில தினங்களுக்கு முன்பு தெலுங்கானா மாநிலத்தில் மீண்டும் தியேட்டர்களை திறந்தபோது ஒரு தியேட்டரில் 5 பேர் மட்டுமே படம் பார்க்க வந்ததால் மீண்டும் மூடி விட்டனர். இதனால் பெரிய நடிகர்கள் படங்கள் தீபாவளி பண்டிகைக்கு பதிலாக பொங்கலை குறிவைத்துள்ளன. விஜய்யின் மாஸ்டர் படத்தை பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர். கார்த்தியில் சுல்தான் படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்தது. எனவே அந்த படத்தையும் பொங்கலுக்கு திரைக்கு கொண்டு வரும் முயற்சியில் படக்குழு ஈடுபட்டு உள்ளது. 

இந்த நிலையில் பிரபுசாலமன் இயக்கத்தில் விஷ்ணு விஷால், ராணா ஆகியோர் நடித்துள்ள காடன் படம் பொங்கலுக்கு வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளனர். இதுபோல் சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படமும் பொங்கலுக்கு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.