சினிமா செய்திகள்

பாஜகவில் இணைவது தொடர்பாக நானே அறிவிப்பேன் - நடிகை வனிதா விஜயகுமார் + "||" + I will announce myself about joining the BJP Actress Vanitha Vijayakumar

பாஜகவில் இணைவது தொடர்பாக நானே அறிவிப்பேன் - நடிகை வனிதா விஜயகுமார்

பாஜகவில் இணைவது தொடர்பாக நானே அறிவிப்பேன் - நடிகை வனிதா விஜயகுமார்
பாஜகவில் இணைவது தொடர்பாக நானே அறிவிப்பேன் என்று நடிகை வனிதா விஜயகுமார் கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை,

நடிகை வனிதா விஜயகுமார் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அண்மையில்  நடிகை குஷ்பு பாஜகவில் இணைந்ததையடுத்து பலர் அக்கட்சியில் இணைந்து வருகின்றனர். இந்நிலையில் திருமணம் உள்ளிட்ட   பல்வேறு சர்ச்சை காரணமாக சமூக வலைதளங்களில் அதிக கவனத்தை ஈர்த்த நடிகை  வனிதா விஜயகுமார் பாஜகவில் இணைவார் என்று கூறப்பட்டது.

இதனிடையே நடிகை வனிதா விஜயகுமார் பாஜகவில் இணைய உள்ளதாக செய்திகள் வெளியான நிலையில், பாஜகவில் இணைவது தொடர்பாக நானே அறிவிப்பேன்; இப்போது அது பற்றி எதுவும் சொல்ல முடியாது என்று வனிதா விஜயகுமார் தெரிவித்துள்ளார்.