சினிமா செய்திகள்

போதைப்பொருள் வழக்கு: பிரபல டி.வி. நடிகை கைது + "||" + Drug case Celebrity TV Actress arrested

போதைப்பொருள் வழக்கு: பிரபல டி.வி. நடிகை கைது

போதைப்பொருள் வழக்கு: பிரபல டி.வி. நடிகை கைது
போதை மருந்து வழக்கில் இந்தி பட உலகம் சிக்கி திணறி வருகிறது.
போதைப்பொருள் கும்பலுடன் தொடர்பு இருப்பதாக இந்தி நடிகையும் மரணம் அடைந்த சுஷாந்த் சிங் காதலியுமான ரியா சக்கரவர்த்தி கைதானார். ரியாவின் சகோதரர் சோவிக் மற்றும் சாமுவேல் மிரண்டா ஆகியோரும் கைது செய்யப்பட்டு உள்ளனர். நடிகைகள் ரகுல் பிரீத் சிங், தீபிகா படுகோனே, ஷரத்தா கபூர், சாரா அலிகான் ஆகியோர் சம்மன் அனுப்பி விசாரிக்கப்பட்டனர். கன்னட நடிகைகள் ராகிணி திவேதி, சஞ்சனா கல்ராணி ஆகியோரும் கைதாகி உள்ளனர். இந்தநிலையில் தற்போது இன்னொரு நடிகையையும் கைது செய்துள்ளனர். அவரது பெயர் பிரீத்திகா சவுகான். இவர் சி.ஐ.டி, தேவோ கே தேவ் மகாதேவ், சாவ்தான் இந்தியா, ஹனுமான் உள்பட பல தொலைக்காட்சி தொடர்களில் நடித்து இருக்கிறார். ஒருவரிடம் இருந்து கஞ்சா வாங்கியபோது பிரீத்திகா சவுகானை போலீசார் கைது செய்துள்ளனர். போதைப்பொருள் விவகாரத்தில் நடிகைகள் அடுத்தடுத்து கைதாவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.தொடர்புடைய செய்திகள்

1. போதைப்பொருள் கடத்தல் வழக்கு: நடிகர் விவேக் ஓபராய் வீட்டில் மத்திய குற்றப்பிரிவு சோதனை
போதைப்பொருள் கடத்தல் வழக்கு தொடர்பாக நடிகர் விவேக் ஓபராய் வீட்டில் மத்திய குற்றப்பிரிவு சோதனை நடத்தி வருகின்றனர்.
2. போதைப் பொருள்களை உட்கொண்டதும் இல்லை, ஊக்குவித்ததும் இல்லை- தயாரிப்பாளர் கரண் ஜோஹர்
போதைப் பொருள்களை உட்கொண்டதும் இல்லை, அதன் பயன்பாட்டை ஊக்குவித்ததும் இல்லை என்று பிரபல இந்தி திரைப்பட தயாரிப்பாளர் கரண் ஜோஹர் தெரிவித்துள்ளார்.
3. போதைப்பொருள் வழக்கு விசாரணைக்கு நடிகைகள் சாரா அலி கான், ஷ்ரத்தா கபூர் ஆஜர்
போதைப்பொருள் வழக்கு தொடர்பாக அனுப்பப்பட்ட சம்மனைத் தொடர்ந்து நடிகைகள் சாரா அலி கான், ஷ்ரத்தா கபூர் இன்று விசாரணைக்கு ஆஜராகியுள்ளனர்.
4. போதைப்பொருள் வழக்கு நடிகை ரகுல் பிரீத்சிங்கிடம் 4 மணி நேரம் விசாரணை
போதைப்பொருள் வழக்கில் நடிகை ரகுல் பிரீத்சிங்கிடம் 4 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது.
5. போதைப்பொருள் வழக்கில் சுஷாந்த் சிங்கின் காதலி நடிகை ரியா சக்ரபோர்த்தி கைது
போதைப்பொருள் வழக்கில் சுஷாந்த் சிங்கின் காதலி நடிகை ரியா சக்ரபோர்த்தி கைது செய்யப்பட்டுள்ளார்.