சினிமா செய்திகள்

திருட்டு இணையதளத்தில் சூர்யாவின் ‘சூரரை போற்று’ முழு படமும் வெளியானது - படக்குழுவினர் அதிர்ச்சி + "||" + The entire film of Surya's 'Surarai Potru' was released on the theft website - the crew was shocked

திருட்டு இணையதளத்தில் சூர்யாவின் ‘சூரரை போற்று’ முழு படமும் வெளியானது - படக்குழுவினர் அதிர்ச்சி

திருட்டு இணையதளத்தில் சூர்யாவின் ‘சூரரை போற்று’ முழு படமும் வெளியானது - படக்குழுவினர் அதிர்ச்சி
திருட்டு இணையதளத்தில் சூர்யாவின் சூரரை போற்று முழு படமும் வெளியானதால் படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

புதிய படங்களை வெளியிடும் திருட்டு இணையதளங்கள் திரைத்துறைக்கு பெரிய வில்லன்களாக நிற்கின்றன. ஏற்கனவே ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித்குமார் உள்ளிட்ட அனைத்து முன்னணி நடிகர்கள் படங்களும் தியேட்டரில் வெளியான சில மணி நேரத்திலேயே திருட்டு இணையதளங்களில் வெளியாகி பட அதிபர்களுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தின. இவற்றை கட்டுப்படுத்த தயாரிப்பாளர்கள் சங்கம் நடவடிக்கைகள் எடுத்தும் முடியவில்லை. இந்த நிலையில் ஓ.டி.டி. தளத்தில் வெளியான சூர்யாவின் சூரரை போற்று படமும் திருட்டு இணையதளங்களில் வெளியாகி படக்குழுவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

இந்த படத்தை நேற்று முன்தினம் இரவு ஓ.டி.டி. தளத்தில் வெளியிட்டனர். சில மணி நேரத்திலேயே முழு படமும் திருட்டு இணையதளத்தில் வந்தது. தியேட்டர்களில் திருடுவதை விட ஓ.டி.டி. தளத்தில் விரைவாக திருடி எச்.டி. தரத்திலேயே வெளியிட்டு விடுவதாக கூறப்படுகிறது. சூரரை போற்று படத்தை சூர்யாவே தயாரித்து இருந்தார். படத்தை தியேட்டரில் வெளியிடவே திட்டமிட்டனர். ஆனால் கொரோனாவால் தியேட்டர்களை திறக்க தாமதமானதால் சில வாரங்களுக்கு முன்பு ஓ.டி.டி. தளத்துக்கு விற்று விட்டனர்.

தொடர்புடைய செய்திகள்

1. தனது நடிப்பை விமர்சிக்கும் சூர்யா
நான் 20 வருடங்களுக்கு மேல் சினிமா துறையில் இருக்கிறேன். ஆனாலும் இன்னும் அதிகமாக கஷ்டப்பட்டு உழைக்க வேண்டும் என்ற எண்ணமே எனக்குள் இருக்கிறது.
2. நீட் விவகாரத்தில் நடிகர் சூர்யாவின் கருத்து ஏற்புடையது- சீமான் பேட்டி
நீட் விவகாரத்தில் நடிகர் சூர்யாவின் கருத்து ஏற்புடையது. அவருக்கு அனைவரும் ஆதரவாக இருக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார்.