சினிமா செய்திகள்

தீபிகா படுகோனே சம்பளம் ரூ.15 கோடியாக உயர்வு + "||" + Deepika Padukone Salary Rs 15 crore increase

தீபிகா படுகோனே சம்பளம் ரூ.15 கோடியாக உயர்வு

தீபிகா படுகோனே சம்பளம் ரூ.15 கோடியாக உயர்வு
இந்தி படங்களுக்கு வெளிநாடுகளில் நல்ல மார்க்கெட் உள்ளதால் நடிகைகள் அதிக சம்பளம் கேட்டு வாங்குகிறார்கள். தற்போது தீபிகா படுகோனே சம்பளம் ரூ.15 கோடியாக உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஷாருக்கான் பதான் என்ற புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இந்த படத்தை சித்தார்த் ஆனந்த் இயக்குகிறார். இதில் ஷாருக்கான் ஜோடியாக நடிக்க தீபிகா படுகோனேவை முடிவு செய்துள்ளனர். இதில் நடிக்க அவருக்கு ரூ.15 கோடி சம்பளம் பேசி இருப்பதாக கூறப்படுகிறது. ஷாருக்கானுடன் ஓம் சாந்தி ஓம் படம் மூலம்தான் தீபிகா படுகோனே இந்தியில் அறிமுகமாகி முன்னணி நடிகையாக உயர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழில் கோச்சடையான் அனிமேஷன் படத்தில் ரஜினிகாந்த் ஜோடியாகவும் நடித்து இருந்தார். திராவகம் வீச்சில் பாதித்த பெண் வாழ்க்கையை மையமாக வைத்து கடந்த ஜனவரி மாதம் வெளியான சப்பாக் படத்தில் தீபிகா படுகோனே நடித்து இருந்தார். அதில் தீபிகா நடிப்புக்கு பாராட்டுகள் கிடைத்தன. இந்தியில் அதிக சம்பளம் வாங்குவதில் கங்கனா ரணாவத்துக்கும், தீபிகா படுகோனேவுக்கும்தான் போட்டி உள்ளது.