சினிமா செய்திகள்

நடிகர் பிரபுதேவா திடீர் திருமணம்? + "||" + Actor Prabhu Deva Sudden marriage

நடிகர் பிரபுதேவா திடீர் திருமணம்?

நடிகர் பிரபுதேவா திடீர் திருமணம்?
சில தினங்களுக்கு முன்பு பிரபுதேவாவுக்கு திருமணம் முடிவாகி விட்டது என்றும், உறவு பெண்ணை மணக்க இருக்கிறார் என்றும் தகவல்கள் பரவின.
பிரபல நடிகரும், இயக்குனருமான பிரபுதேவாவுக்கும், நடிகை நயன்தாராவுக்கும் பல வருடங்களுக்கு முன்பு காதல் மலர்ந்தது. இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு எடுத்தனர். இதற்காக முதல் மனைவியை பிரபுதேவா விவாகரத்தும் செய்தார். ஆனால் கடைசி நேரத்தில் பிரபுதேவாவுக்கும், நயன்தாராவுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு காதல் முறிந்ததால் திருமணம் நின்று போனது. பிரபுதேவாவுக்கு தற்போது 47 வயது ஆகிறது. அவருக்கு திருமணம் செய்து வைக்க பெற்றோர் ஆர்வம் காட்டி வந்தனர். சில தினங்களுக்கு முன்பு பிரபுதேவாவுக்கு திருமணம் முடிவாகி விட்டது என்றும், உறவு பெண்ணை மணக்க இருக்கிறார் என்றும் தகவல்கள் பரவின. தற்போது பிரபுதேவாவுக்கு திருமணம் முடிந்து விட்டதாக புதிய தகவல் வெளியாகி உள்ளது. மணப்பெண் பீகாரை சேர்ந்தவர் என்றும், பிசியோதெரபி டாக்டராக இருக்கிறார் என்றும் கூறப்படுகிறது. இந்த பெண்ணிடம் சமீபத்தில் பிரபுதேவா பிசியோதெரபி சிகிச்சை எடுத்தபோது நெருக்கம் ஏற்பட்டு பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதனை பிரபுதேவா உறுதிப்படுத்தவில்லை.

தொடர்புடைய செய்திகள்

1. நடிகர் பிரபுதேவா 2-வது திருமணம்?
நடிகர் பிரபுதேவா 2-வது திருமணம் செய்துகொள்ள இருப்பதாக இணையதளங்களில் தகவல் பரவி வருகிறது.