சினிமா செய்திகள்

நயன்தாரா படங்களில் விக்னேஷ் சிவன் தலையீடா? + "||" + In Nayantara films Vignesh Sivan Intervention

நயன்தாரா படங்களில் விக்னேஷ் சிவன் தலையீடா?

நயன்தாரா படங்களில் விக்னேஷ் சிவன் தலையீடா?
நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் காதலர்களாக இருந்து வருகிறார்கள்.
திருமணம் செய்து கொள்ளாமலே கணவர்-மனைவி போல் ஒரே வீட்டில் வாழ்ந்து வருகிறார்கள். ஜோடியாக வெளிநாடுகளுக்கு பறந்து போய் காதல் வளர்க்கும் வேலைகளை கச்சிதமாக செய்து வருகிறார்கள்.

டைரக்டராக இருந்த விக்னேஷ் சிவன், நயன்தாரா புண்ணியத்தில் தயாரிப்பாளராகி இருக்கிறார். புதிய ‘நெற்றிக்கண்‘ படத்தை அவர் தயாரித்து வருகிறார். மிலிந்த்ராவ் டைரக்டு செய்கிறார். இந்த படத்தில் நயன்தாரா பார்வையற்ற பெண்ணாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

படப்பிடிப்பு நடைபெறும் இடங்களுக்கு விக்னேஷ் சிவன் வந்து விடுகிறார். அப்போது டைரக்டர் மிலிந்த்ராவ் வேலைகளில் விக்னேஷ் சிவன் தலையிடுவதாக பேசப்படுகிறது.

“ஒரு படைப்பாளி வேலைகளில் இன்னொரு படைப்பாளி தலையிடலாமா? அது தப்பு அல்லவா?” என்று ஒரு சிலர் கருத்து தெரிவிக்கிறார்கள். “விக்னேஷ் சிவனும் ஒரு டைரக்டர்தான். அதனால் அவர் தலையிடுவதில் தப்பு இல்லை” என்று இன்னும் சிலர் சொல்கிறார்கள்.

“விக்னேஷ் சிவன், ‘நெற்றிக்கண்’ படத்தில் மட்டும் தலையிடவில்லை. நயன்தாரா நடிக்கும் எல்லா படங்களிலும் அவர் தலையீடு இருக்கிறது” என்று கூறப்படுகிறது. வருங்கால மனைவி நன்றாக இருக்க வேண்டும் என்று அவருடைய காதலர் நினைப்பதில், என்ன தப்பு இருக்கிறது? என்று நயன்தாராவின் தீவிர ரசிகர் ஒருவர் கேட்கிறார்.

சங்கதி, சங்க பஞ்சாயத்துக்கு வராமல் இருந்தால் சரி...