டி.வி. தொடரில் இருந்து விலகும் நடிகரின் மகள்!


டி.வி. தொடரில் இருந்து விலகும் நடிகரின் மகள்!
x
தினத்தந்தி 23 Nov 2020 8:13 PM GMT (Updated: 2020-11-24T01:43:38+05:30)

‘சின்னத்திரை’யில் சமீபத்தில் தொடங்கி ஒளிபரப்பாகி வரும் தொடர் ‘பூவே உனக்காக’. அதில் 2 கதாநாயகிகளில் ஒருவராக நடித்து வருபவர் ஜோவிட்டா.

‘சின்னத்திரை’யில் சமீபத்தில் தொடங்கி ஒளிபரப்பாகி வரும் தொடர் ‘பூவே உனக்காக’. அதில் 2 கதாநாயகிகளில் ஒருவராக நடித்து வருபவர் ஜோவிட்டா. இவர் நடிகர் லிவிங்ஸ்டனின் மகள். ‘பிஸி’யாக நடித்துக்கொண்டிருந்த ஜோவிட்டா திடீரென்று அந்த டி.வி. தொடரில் இருந்து விலகப்போவதாக கூறுகிறார்.

இதற்கு என்ன காரணம்? என்று அவர் கூற மறுக்கிறார். திடீரென்று விலகினால் தயாரிப்பாளர் பாதிக்கப்படுவார்... பிரச்சினைகளை சந்திக்க நேரிடும் என்பதால் கொஞ்ச நாட்கள் நடித்து கொடுத்துவிட்டு, பின்னர் விலகிக்கொள்வது என்று அவர் முடிவு செய்துள்ளார். தனது கதாபாத்திரத்துக்கு ஒரு முடிவை தந்து சீக்கிரமாக தன்னை விடுவிக்கும்படி, டைரக்டரிடம் கேட்டுக்கொண்டிருக்கிறாராம். அந்த டி.வி. தொடரில் இருந்து விலகுவதற்கான காரணத்தை மட்டும் ஜோவிட்டா யாரிடமும் சொல்லவில்லையாம்.

நெருப்பில்லாமல் புகையுமா? சீக்கிரமே உண்மை வெளிவரும்.

Next Story