கோவிலில் முத்தகாட்சி எதிர்ப்பாளர்களை கண்டித்த நடிகை


கோவிலில் முத்தகாட்சி எதிர்ப்பாளர்களை கண்டித்த நடிகை
x
தினத்தந்தி 26 Nov 2020 10:30 PM GMT (Updated: 2020-11-27T08:54:09+05:30)

கோவிலில் முத்தகாட்சியை படமாக்கியதை எதிர்ப்பு தெரிவித்தவர்களுக்கு நடிகை சுவரா பாஸ்கர் தனது வலைத்தளத்தில் பதிலடி கொடுத்துள்ளார்.

ஓ.டி.டி தளத்தில் ‘எ சுவிட்டபிள் பாய்’ என்ற வெப் தொடர் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அந்த தொடரில் கோவிலில் இந்து கடவுள்கள் முன்னால் செருப்பு அணிந்து சுற்றுவது போன்றும், காதல் ஜோடி முத்தமிடுவது போன்றும் காட்சிகள் உள்ளன என்று பா.ஜனதா கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த தொடர் மத உணர்வை புண்படுத்துகிறது என்று குற்றம்சாட்டி போலீசிலும் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. 

தொடரில் இஷான் கட்டார், தபு, ராம் கபூர், ராசிகா துகல், தன்யா மனிகதலா, தனேஷ் தஷ்வி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். எதிர்ப்பாளர்களுக்கு நடிகை சுவரா பாஸ்கர் பதிலடி கொடுத்துள்ளார். இவர் தனுசுடன் ராஞ்சனா உள்பட பல இந்தி படங்களில் நடித்து இருக்கிறார். சுவரா பாஸ்கர் தனது வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “கத்துவா என்ற கிராமத்தில் 8 வயது குழந்தையை கோவிலுக்குள் வைத்து கும்பலாக பாலியல் பலாத்காரம் செய்த கொடுமை நடந்தது. 

அப்போது உங்கள் ரத்தம் கொதிக்கவில்லை. உங்களுக்கு ஒரு படத்துக்காக கோவிலில் முத்தகாட்சியை படமாக்கியதை எதிர்க்க உரிமை இல்லை” என்று கூறியுள்ளார்.

Next Story