காதலர் வீட்டின் அருகில் ரூ.32 கோடிக்கு புது வீடு வாங்கிய நடிகை


காதலர் வீட்டின் அருகில் ரூ.32 கோடிக்கு புது வீடு வாங்கிய நடிகை
x
தினத்தந்தி 30 Nov 2020 1:12 AM GMT (Updated: 2020-11-30T06:42:12+05:30)

பிரபல இந்தி நடிகை அலியாபட். இவர் இந்தி இயக்குனர் மகேஷ் பட்டின் மகள் ஆவார். கரண் ஜோகர் இயக்கிய ஸ்டூடண்ட் ஆப் த இயர் படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி முன்னணி நடிகையாக உயர்ந்தார்.

இந்தி பட உலகில் வாரிசுகள் ஆதிக்கம் செலுத்துவதாக கங்கனா ரணாவத் சொன்ன குற்றச்சாட்டில் அலியாபட்டும் சிக்கினார். வாரிசு என்பதால் அவருக்கு பட வாய்ப்புகள் அதிகம் கிடைப்பதாக கூறப்பட்டது. அலியாபட்டுக்கு எதிராக சமூக வலைத்தளத்தில் பலரும் பதிவுகள் வெளியிட்டனர். இது பரபரப்பானது. அலியாபட்டும், இந்தி நடிகர் ரன்பீர் கபூரும் காதலிக்கிறார்கள். ரன்பீர் கபூர் மறைந்த நடிகர் ரிஷிகபூரின் மகன் ஆவார். சினிமாவிலும், விளம்பர படங்களிலும் நடித்து அதிகம் சம்பாதிக்கும் அலியாபட் மும்பை பாந்த்ரா பகுதியில் புதிய வீடு வாங்கி இருக்கிறார். அங்குள்ள அடுக்கு மாடி குடியிருப்பின் 5-வது மாடியில் இந்த வீடு உள்ளது. இதன் மதிப்பு ரூ.32 கோடி என்று கூறப்படுகிறது. இதே குடியிருப்பின் 7-வது மாடியில் ரன்பீர் கபூர் வசித்து வருகிறார். காதலர் வீட்டின் அருகிலேயே அதிக விலைக்கு வீட்டை அலியாபட் வாங்கி இருக்கிறார்.

Next Story