சினிமா செய்திகள்

ராமாயண கதையில் சீதையாக கீர்த்தி சனான் + "||" + In the story of Ramayana Keerthi Sanon as Sita

ராமாயண கதையில் சீதையாக கீர்த்தி சனான்

ராமாயண கதையில் சீதையாக கீர்த்தி சனான்
ராமாயண கதையை மையமாக வைத்து ஆதிபுருஷ் என்ற பெயரில் தமிழ், தெலுங்கு, இந்தி கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் புதிய படம் தயாராகிறது.
இந்த படத்தை 3 டியில் எடுக்கின்றனர். இதில் ராமராக பிரபாஸ் நடிக்கிறார். அவர் கூறும்போது, “ஆதிபுருஷ் படத்தில் ஒவ்வொரு கதாபாத்திரமும் சவாலானது. இதில் நடிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்” என்றார். இது பிரபாசுக்கு 21-வது படம். இதில் நடிப்பதற்காக வில்வித்தை பயிற்சிகள் எடுத்து வருகிறார். பிரபாஸ் ஏற்கனவே பாகுபலி படத்தில் கதாநாயகனாக நடித்து பிரபலமானவர். தெலுங்கில் முன்னணி கதாநாயகனாக இருக்கிறார். ராவணனாக இந்தி நடிகர் சயீப் அலிகான் நடிக்கிறார். ஓம்ராவத் இயக்குகிறார். ஜனவரியில் படப்பிடிப்பை தொடங்க உள்ளனர். இந்த படம் பற்றிய அறிவிப்பையும், முதல் தோற்றத்தையும் ஏற்கனவே வெளியிட்டு உள்ளனர். இந்த நிலையில் பிரபாஸ் ஜோடியாக சீதை வேடத்தில் நடிப்பது யார் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. கீர்த்தி சுரேஷ், அனுஷ்கா சர்மா உள்ளிட்டோர் பெயர்கள் அடிபட்டன. இந்த நிலையில் இந்தி நடிகை கீர்த்தி சனானை தேர்வு செய்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.