‘லாபம்’ படம் ஓ.டி.டி.யில் ரிலீசா? விஜய் சேதுபதி விளக்கம்


‘லாபம்’ படம் ஓ.டி.டி.யில் ரிலீசா? விஜய் சேதுபதி விளக்கம்
x
தினத்தந்தி 9 Dec 2020 9:30 PM GMT (Updated: 9 Dec 2020 11:23 PM GMT)

“லாபம் படம் நேரடியாக ஓ.டி.டி.யில் வெளியாகாது. திரையரங்குகளில்தான் வெளியிடப்படும்” என விஜய் சேதுபதி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

சூர்யாவின் சூரரை போற்று, விஜய் சேதுபதி நடித்த க.பெ.ரணசிங்கம், ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள், கீர்த்தி சுரேசின் பெண்குயின், வரலட்சுமி சரத்குமாரின் டேனி மற்றும் லாக்கப் உள்ளிட்ட படங்கள் தியேட்டர்களுக்கு பதிலாக ஓ.டி.டி. தளத்தில் வெளிவந்தன. மேலும் சில படங்களை நேரடியாக ஓ.டி.டி. தளத்தில் வெளியிட பேச்சுவார்த்தைகள் நடக்கின்றன. இந்த நிலையில் எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, சுருதிஹாசன் ஜோடியாக நடித்துள்ள லாபம் படத்தை ஓ.டி.டி. தளத்துக்கு விற்று இருப்பதாக படக்குழுவினர் அறிவித்தனர். இதனால் லாபம் படம் தியேட்டர்களில் ரிலீசாகாது என்றும், நேரடியாக ஓ.டி.டி. தளத்தில் வெளியாக உள்ளது என்றும் வலைத்தளத்தில் தகவல் பரவியது. இது தியேட்டர் அதிபர்கள் மற்றும் ரசிகர்கள் தரப்பில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கு விஜய்சேதுபதி விளக்கம் அளித்துள்ளார். அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “லாபம் படம் நேரடியாக ஓ.டி.டி.யில் வெளியாகாது. திரையரங்குகளில்தான் வெளியிடப்படும்” என்றார். இதன் மூலம் முதலில் தியேட்டரிலும், அதன்பிறகு ஓ.டி.டி. தளத்திலும் லாபம் வெளியாவது உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது.

Next Story