சினிமா செய்திகள்

ஏமாற்றி பணம் பறிப்பு கடனில் தவிக்கும் கவர்ச்சி நடிகை + "||" + Cheat money flush Debt-ridden sexy actress

ஏமாற்றி பணம் பறிப்பு கடனில் தவிக்கும் கவர்ச்சி நடிகை

ஏமாற்றி பணம் பறிப்பு கடனில் தவிக்கும் கவர்ச்சி நடிகை
ஒருவன் என்னை ஏமாற்றி எனது பணத்தையும் எடுத்துக் கொண்டு ஓடிவிட்டான். இதனால் கடனில் தவிக்கிறேன் என கவர்ச்சி நடிகை ராக்கி சாவந்த் கூறியுள்ளார்.
தமிழில் என் சகியே, முத்திரை ஆகிய படங்களில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடிய கவர்ச்சி நடிகை ராக்கி சாவந்த், இந்தி, தெலுங்கில் அதிக படங்களில் நடித்துள்ளார். இவர் இங்கிலாந்து தொழில் அதிபர் ரிதேஷ் என்பவரை காதலித்து ரகசிய திருமணம் செய்து கொண்டார். ஆனால் கணவரின் புகைப்படங்களை வெளியிடவில்லை. இந்த நிலையில் கணவர் மற்றும் சினிமா வாழ்க்கை குறித்து ராக்கி சாவந்த் கூறியதாவது:-

“எனது கணவரை பார்க்க வேண்டும். அறிமுகம் செய்து வையுங்கள் என்று ரசிகர்கள் கேட்கிறார்கள். திருமணம் இக்கட்டான சூழ்நிலையில் நடந்தது. விரைவில் கணவர் பற்றிய விவரங்களை வெளியிடுகிறேன். என்னை சமீபகாலமாக படங்களில் பார்க்க முடியவில்லை என்று ரசிகர்கள் சொல்கிறார்கள். 2 வருடங்கள் எனது வாழ்க்கையில் எதிர்பாராத சம்பவங்கள் நடந்தன. ஒருவன் என்னை ஏமாற்றி வளர்ச்சியை நாசம் செய்தான். எனது பணத்தையும் எடுத்துக் கொண்டு ஓடிவிட்டான். இதனால் சினிமாவில் கவனம் செலுத்த முடியாமல் கஷ்டப்பட்டேன். பணக்காரரை திருமணம் செய்தால் கஷ்டம் தீர்ந்து விடும் என்று நினைத்தேன். அதுவும் நடக்கவில்லை. கடனில் தவிக்கிறேன்.”

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.