சினிமா செய்திகள்

கொரோனா பரவலால் ‘காட்டேரி’ படத்தின் ரிலீஸ் தள்ளிவைப்பு + "||" + Postponement of release of ‘Vampire’ movie by Corona spread

கொரோனா பரவலால் ‘காட்டேரி’ படத்தின் ரிலீஸ் தள்ளிவைப்பு

கொரோனா பரவலால் ‘காட்டேரி’ படத்தின் ரிலீஸ் தள்ளிவைப்பு
கொரோனா 2-வது அலை காரணமாக காட்டேரி ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டு உள்ளதாக படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஸ்டூடியோ கிரீன் அறிவித்து உள்ளது.
வைபவ், ஆத்மிகா, பொன்னம்பலம் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் காட்டேரி. இந்த படத்தை டீ.கே இயக்கி உள்ளார். திகில் படமாக தயாராகி உள்ளது. காட்டேரி படம் இன்று கிறிஸ்துமஸ் பண்டிகையில் தமிழகம் முழுவதும் தியேட்டர்களில் ரிலீசாகும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் கொரோனா 2-வது அலை காரணமாக காட்டேரி ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டு உள்ளதாக படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஸ்டூடியோ கிரீன் அறிவித்து உள்ளது. அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கொரோனா 2-வது அலை பரவி வருவதாக வெளியாகும் தகவல் அடிப்படையிலும், அனைவரின் நலன் மற்றும் குழப்பமான நிலையில்லாத தன்மையை கருத்தில் கொண்டும் படத்தில் பணியாற்றியவர்கள் உழைப்பு சரியான முறையில் மக்களை சென்றடைய வேண்டும் என்ற நோக்கிலும் 25-ந்தேதி வெளிவர இருக்கும் காட்டேரி ரிலீசை தள்ளிவைக்கிறோம். கொரோனா தாக்கம் குறைந்ததும் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இது தியேட்டர் அதிபர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.