சினிமா செய்திகள்

பொங்கலுக்கு, ‘பூமி’ படம் ஓ.டி.டி.யில் ரிலீஸ் - ஜெயம் ரவி அறிக்கை + "||" + For Pongal, ‘Bhoomi’ movie released on ODT - Jayam Ravi report

பொங்கலுக்கு, ‘பூமி’ படம் ஓ.டி.டி.யில் ரிலீஸ் - ஜெயம் ரவி அறிக்கை

பொங்கலுக்கு, ‘பூமி’ படம் ஓ.டி.டி.யில் ரிலீஸ் - ஜெயம் ரவி அறிக்கை
ஜெயம் ரவி. நிதி அகர்வால் ஜோடியாக நடித்துள்ள பூமி படமும் ஓ.டி.டி தளத்தில் வெளியாகிறது. இதுகுறித்து நடிகர் ஜெயம் ரவி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கொரோனாவால் சூர்யாவின் சூரரை போற்று, விஜய்சேதுபதியின் க.பெ.ரணசிங்கம், ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள், கீர்த்தி சுரேசின் பென்குயின் உள்ளிட்ட பல படங்கள் ஓ.டி.டி தளத்தில் வெளி வந்தன. தற்போது லட்சுமண் இயக்கத்தில் ஜெயம் ரவி. நிதி அகர்வால் ஜோடியாக நடித்துள்ள பூமி படமும் ஓ.டி.டி தளத்தில் வெளியாகிறது.

இதுகுறித்து நடிகர் ஜெயம் ரவி வெளியிட்டுள்ள அறிக்கையில், “எனது நீண்ட திரைப்பயணம் முழுக்க ரசிகர்களாகிய உங்களால் ஆனது. பூமி எனது சினிமா பயணத்தில் ஒரு மைல்கல், இந்த படம் எனது திரைப்பயணத்தில் 25-வது படம். கொரோனா காலத்தில் ரிலீசாகும் படங்களின் வரிசையில் இப்படமும் இணைந்திருக்கிறது. உங்களுடன் இணைந்து திரையரங்கில் இந்த படத்தை ரசிக்க நினைத்தேன். ஆனால் காலம் வேறொரு திட்டம் வைத்திருக்கிறது. இந்த படம் ஓ.டி.டி தளத்தில் உங்கள் இல்லம் தேடி உங்கள் வரவேற்பறைக்கே வரவுள்ளது. பண்டிகை காலங்களில் திரையரங்குகளில் எனது படத்தை பார்த்து பண்டிகையை கொண்டாடினீர்கள். இந்த பொங்கல் தினத்தில் எனது அழகான திரைப்படத்துடன் உங்கள் வீட்டில் உங்களை சந்திப்பதை ஆசிர்வாதமாக கருதுகிறேன்” என்று கூறியுள்ளார்.