சினிமா செய்திகள்

கொரோனா பாதிப்பு: மூச்சு பயிற்சி செய்யும் நடிகை ரகுல் பிரீத் சிங் + "||" + Corona Vulnerability: Breathing Training Actress Ragul Preet Singh

கொரோனா பாதிப்பு: மூச்சு பயிற்சி செய்யும் நடிகை ரகுல் பிரீத் சிங்

கொரோனா பாதிப்பு: மூச்சு பயிற்சி செய்யும் நடிகை ரகுல் பிரீத் சிங்
கொரோனா உறுதியானதுமே எனது அறையில் தனிமைப்படுத்திக்கொண்டேன். வெளியில் எங்கேயும் செல்வது இல்லை. தினமும் மூச்சுப்பயிற்சி செய்கிறேன் என்று நடிகை ரகுல் பிரீத் சிங் தெரிவித்துள்ளார்.
நடிகைகள் தமன்னா, ஐஸ்வர்யா ராய், நிக்கி கல்ராணி, ஐஸ்வர்யா அர்ஜுன் உள்ளிட்டோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சைக்கு பின் குணமடைந்தனர். தமிழில் சூர்யாவுடன் என்.ஜி.கே., கார்த்தி ஜோடியாக தீரன் அதிகாரம் ஒன்று, தேவ் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமான ரகுல் பிரீத் சிங்குக்கு இரு தினங்களுக்கு முன்பு கொரோனா தொற்று ஏற்பட்டது. 

இதையடுத்து தன்னை தனிமைப்படுத்தி சிகிச்சை பெற்று வருகிறார். கொரோனா தொற்று உறுதியானதுமே சில முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து அதனை வீடியோ மூலம் ரசிகர்களுக்கு தெரிவித்துள்ளார். அந்த வீடியோவில், ‘கொரோனா தொற்று ஏற்பட்ட பிறகு என்னென்ன முன் எச்சரிக்கை எடுத்து இருக்கிறீர்கள் என்று பலரும் என்னிடம் கேள்வி எழுப்புகிறார்கள். கொரோனா உறுதியானதுமே எனது அறையில் தனிமைப்படுத்திக்கொண்டேன். வெளியில் எங்கேயும் செல்வது இல்லை. தினமும் மூச்சுப்பயிற்சி செய்கிறேன். வைட்டமின் மாத்திரைகள் எடுத்துக்கொள்கிறேன். சத்தான உணவுகளும் சாப்பிடுகிறேன். கொரோனாவில் இருந்து விரைவில் மீண்டு வருவேன்’ என்று கூறியுள்ளார்.