சினிமா செய்திகள்

தியேட்டரில் ரிலீசானதும் இணையதளத்தில் வந்த ஷகிலா வாழ்க்கை படம் + "||" + Shakila's Life Movie released in theater and website

தியேட்டரில் ரிலீசானதும் இணையதளத்தில் வந்த ஷகிலா வாழ்க்கை படம்

தியேட்டரில் ரிலீசானதும் இணையதளத்தில் வந்த ஷகிலா வாழ்க்கை படம்
மலையாள திரையுலகை கவர்ச்சியால் கலக்கியவர் ஷகிலா. இவர் நடித்த படங்கள் முன்னணி கதாநாயகர்கள் படங்களை வசூலில் பின்னுக்கு தள்ளின.
இதையடுத்து அவரது படங்களுக்கு எதிர்ப்புகள் கிளம்பின. இதனால் தமிழ் படங்களில் நடிக்க தொடங்கினார். ஷகிலா வாழ்க்கை ஷகிலா என்ற பெயரிலேயே சினிமா படமாகி தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் தியேட்டர்களில் வெளியாகி உள்ளது. இதில் ஷகிலா கதாபாத்திரத்தில் பிரபல இந்தி நடிகை ரிச்சா சத்தா நடித்துள்ளார்.

படத்தில் பிரபல மலையாள நடிகரை வில்லனாக சித்தரித்து இருப்பதாக சர்ச்சைகள் எழுந்துள்ளன. கற்பழிப்பு குற்றங்களுக்கு ஷகிலா படங்கள் காரணமாக உள்ளன என்று திரையுலகினரையும் பெண்களையும் அவர் தூண்டி விட்டு தடை விதிக்க வைப்பது போன்றும் காட்சிகள் உள்ளன. இந்த நிலையில் ஷகிலா படம் திரைக்கு வந்த ஒரு நாளிலேயே திருட்டுத்தனமாக இணைய தளத்திலும் வெளியானது. இது படக் குழுவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.