சினிமா செய்திகள்

படமாகும் பசும்பொன் தேவர் வாழ்க்கை + "||" + The film is about the life of the Pacumpon tevar

படமாகும் பசும்பொன் தேவர் வாழ்க்கை

படமாகும் பசும்பொன் தேவர் வாழ்க்கை
பசும்பொன் முத்துராமலிங்க தேவர் வாழ்க்கை வரலாறு ‘தேசிய தலைவர்’ என்ற பெயரில் சினிமா படமாக தயாராகிறது.
இந்த படத்தை விஜயகாந்த் நடித்த ஊமை விழிகள், உழவன் மகன், கருப்பு நிலா உள்ளிட்ட படங்களை இயக்கி பிரபலமான அரவிந்தராஜ் டைரக்டு செய்கிறார். பசும்பொன் தேவர் வாழ்க்கையில் நடந்த அனைத்து சம்பவங்களும் படத்தில் காட்சிப்படுத்தப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார். தேசிய தலைவர் படத்துக்கு இளையராஜா இசையமைக்கிறார். இதில் பசும்பொன் தேவர் கதாபாத்திரத்தில் ஜே.எம்.பஷீர் நடிக்கிறார்.

கதாபாத்திரத்துக்கு பொருத்தமாக இருந்ததால் அவரை தேர்வு செய்து இருப்பதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். மேலும் மகாத்மா காந்தி, நேரு, பெரியார் உள்ளிட்ட பல தலைவர்கள் கதாபாத்திரங்களுக்கும் நடிகர்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். இதன் படப்பிடிப்பு வடபழனியில் உள்ள ஸ்டூடியோவில் பூஜையுடன் தொடங்கியது. முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டன. படப் பிடிப்பை விரைவில் முடித்து திரைக்கு கொண்டு வர திட்டமிட்டு உள்ளனர்.