கொரோனா காலத்தில் ரூ.230 கோடிக்கு விலை போன சல்மான்கான் படம்


கொரோனா காலத்தில் ரூ.230 கோடிக்கு விலை போன சல்மான்கான் படம்
x
தினத்தந்தி 30 Dec 2020 10:45 PM GMT (Updated: 30 Dec 2020 8:30 PM GMT)

கொரோனா சினிமா தொழிலை சிதைத்துள்ளது. புதிய படங்களை திரைக்கு கொண்டு வர தயாரிப்பாளர்கள் தயங்குகிறார்கள்.

திரைக்கு வந்த படங்களும் கூட்டம் இல்லாமல் வசூல் பாதித்து நஷ்டம் அடைந்துள்ளன. இந்த கஷ்டத்தில் இருந்து சினிமா எப்போது மீளுமோ என்ற தவிப்பில் திரையுலகினர் இருக்கிறார்கள். ஆனால் இந்த கொரோனா காலத்திலும் சல்மான்கான் நடித்துள்ள ராதே இந்தி படம் அதிக விலைபோய் உள்ளது. ராதே படத்தை பிரபுதேவா இயக்கி உள்ளார். சல்மான்கான் ஜோடியாக திஷா பதானி நடித்துள்ளார். இந்த படத்தை மே மாதமே திரைக்கு கொண்டு வர திட்டமிட்டு கொரோனாவால் முடங்கியது. தற்போது படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவராகவும் உள்ள சல்மான்கான் ராதே படத்தின் திரையரங்கம், சாட்டிலைட், டிஜிட்டல், ஆடியோ உரிமைகள் அனைத்தையும் சேர்த்து மொத்தமாக ரூ.230 கோடிக்கு விற்று இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. கொரோனா காலத்தில் இவ்வளவு பெரிய தொகைக்கு படத்தை சல்மான்கான் விற்று இருப்பது திரையுலகினரை ஆச்சரியப்படுத்தி உள்ளது.

Next Story