தியேட்டரில் பார்வையாளர்களை 100 சதவீதம் அனுமதிக்க வேண்டும் பட விழாவில் குஷ்பு பேச்சு


தியேட்டரில் பார்வையாளர்களை 100 சதவீதம் அனுமதிக்க வேண்டும் பட விழாவில் குஷ்பு பேச்சு
x
தினத்தந்தி 1 Jan 2021 9:30 PM GMT (Updated: 1 Jan 2021 7:59 PM GMT)

“எனக்கு ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றிய சாய் படம் தயாரிக்க போகிறேன் என்றதும் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் கவனமாக செய்யுங்கள் என்றேன்.

குஷ்பு, சுஹாசினி உள்ளிட்ட பல நடிகைகளுக்கு ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றிய சாய், மாயத்திரை என்ற படத்தை தயாரித்துள்ளார். இதில் அசோக், சாந்தினி, ஷீலா ராஜகுமாரி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சம்பத்குமார் இயக்கி உள்ளார்.

இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. விழாவில் நடிகை குஷ்பு கலந்து கொண்டு பேசியதாவது:-

“எனக்கு ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றிய சாய் படம் தயாரிக்க போகிறேன் என்றதும் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் கவனமாக செய்யுங்கள் என்றேன். இப்போது நஷ்டம் இல்லை என்றார். சினிமாவை தவறான கண்ணோட்டத்தில் வெளியே பார்க்கின்றனர். ஆனால் என்னுடன் பணியாற்றிய ஆண்கள், இயக்குனர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் எல்லோரும் பாதுகாப்பாக பார்த்துக்கொண்டனர். டான்சர், லைட்மேன் மூலம்தான் தமிழ் கற்றுக்கொண்டேன். டாஸ்மாக்கை 100 சதவீதம் திறந்து இருப்பதுபோல் சினிமா தியேட்டர்கள் 100 சதவீத பார்வையாளர்களோடு இயங்க அனுமதி வழங்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை கேட்டுக்கொள்கிறேன். தயாரிப்பாளர் சங்கத்தினர் சினிமா துறையில் பிரச்சினைகள் வரும்போது சிறிய பட தயாரிப்பாளர்களுக்கு ஆதரவு கொடுக்க வேண்டும்.” இவ்வாறு குஷ்பு பேசினார்.

விழாவில் நடிகை சுஹாசினி, தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் முரளி உள்ளிட்ட பலர் பங்கேற்று பேசினர்.

Next Story