சினிமா செய்திகள்

கயல் படம் மூலம் பிரபலமான நடிகை ஆனந்தி திருமணம் + "||" + Anandi is married to famous actress through Kayal movie

கயல் படம் மூலம் பிரபலமான நடிகை ஆனந்தி திருமணம்

கயல் படம் மூலம் பிரபலமான நடிகை ஆனந்தி திருமணம்
கயல் படம் மூலம் பிரபலமான நடிகை ஆனந்தியின் திருமணம் மிகவும் எளிமையாக நடைபெற்றுள்ளது.
சென்னை,

தமிழில் 2014 ஆம் ஆண்டு வெளியான பொறியாளன் படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் ஆனந்தி. இதைத் தொடர்ந்து பிரபு சாலமன் இயக்கிய கயல் படத்தில் இவரது நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது. இதனால் இவர் ‘கயல்’ ஆனந்தி ஆனார்.

இவர் தற்போது டைட்டானிக் காதலும் கவிழ்ந்து போகும், ஏஞ்சல், அலாவுதீனின் அற்புத கேமரா, ராவணக் கூட்டம், கமலி ஃப்ரம் நடுக்காவேரி, தெலுங்கில், ஜாம்பி ரெட்டி போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார்.

நடிகை ஆனந்திக்கும் தெலங்கானாவை சேர்ந்த சாக்ரடீஸ் என்பவருக்கும் திருமணம் பேசி முடிக்க பட்டுள்ளதாக செய்திகள் வெளியானது.

இந்நிலையில் ஆனந்தி திருமணம் இன்று இரவு எளிமையாக நடைபெற்றது. இந்த திருமணத்துக்கு, குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே அழைப்பு விடுத்துள்ளதாக கூறப்பட்டது. தற்போது தயாரிப்பாளர் அம்மா கிரியேஷன்ஸ் சிவா, ஜே எஸ் கே சதீஷ், இயக்குனர் நவீன் ஆகியோர் கலந்துகொண்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.