சினிமா செய்திகள்

காப்பாற்ற ஓடிய மக்கள்; நமீதா கிணற்றில் தவறி விழுந்தாரா? + "||" + Did Namitha fall into the well?

காப்பாற்ற ஓடிய மக்கள்; நமீதா கிணற்றில் தவறி விழுந்தாரா?

காப்பாற்ற ஓடிய மக்கள்; நமீதா கிணற்றில் தவறி விழுந்தாரா?
நடிகை நமீதா முதன் முறையாக “பெளவ் வெளவ்” என்ற படத்தை தயாரித்து முக்கிய கதாபாத்திரத்திலும் நடிக்கிறார்.

நடிகை நமீதா முதன் முறையாக “பெளவ் வெளவ்” என்ற படத்தை தயாரித்து முக்கிய கதாபாத்திரத்திலும் நடிக்கிறார். இந்த படத்தை ஆர்.எல்.ரவி, மேத்யூ ஸ்கேரியா ஆகியோர் இயக்குகிறார்கள். இதன் படப்பிடிப்பு திருவனந்தபுரத்தில் நடந்து வருகிறது. அங்குள்ள காட்டுப்பகுதியில் முக்கிய காட்சியை படமாக்கினார்கள். 

படப்பிடிப்பை பார்க்க கிராம மக்கள் திரண்டு நின்றனர். ஒரு கிணற்றின் அருகில் நமீதா நடந்து சென்றபோது, அவர் கையில் வைத்திருந்த செல்போன் தவறி கிணற்றுக்குள் விழுந்தது. உடனே பதற்றத்தில் அதை தாவி பிடிக்க நமீதா முயற்சி செய்தபோது கிணற்றுக்குள் விழுந்தார். இதை பார்த்துக்கொண்டிருந்த மக்கள் பதறியபடி நமீதாவை காப்பாற்ற கிணற்றின் அருகே ஓடினார்கள். அவர்களை படக்குழுவினர் தடுத்தனர். 

அதன்பிறகுதான் அதுவும் படப்பிடிப்பு என்று தெரிய வந்தது. படப்பிடிப்பு என்பதை மக்களுக்கு புரியவைத்து அங்கிருந்து அப்புறப்படுத்தினர். ஆனாலும் பக்கத்து கிராமங்களுக்கு படப்பிடிப்பில் நமீதா கிணற்றில் தவறி விழுந்து விட்டதாக தகவல் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.

தொடர்புடைய செய்திகள்

1. நமீதா, ஓடிடி தளம் தொடங்கினார்
சினிமா தியேட்டர்கள் மட்டுமே புதிய படங்களை திரையிடும் காலம் போய், அதற்கு போட்டியாக ‘ஓடிடி’ தளங்கள் வந்துவிட்டன.