சினிமா செய்திகள்

முன்னாள் கணவர் கோபம்: சர்ச்சையில் சிக்கிய நடிகை குட்டி ராதிகா + "||" + Ex-husband angry: Actress Kutty Radhika embroiled in controversy

முன்னாள் கணவர் கோபம்: சர்ச்சையில் சிக்கிய நடிகை குட்டி ராதிகா

முன்னாள் கணவர் கோபம்: சர்ச்சையில் சிக்கிய நடிகை குட்டி ராதிகா
தமிழில் இயற்கை, வர்ணஜாலம், மீசை மாதவன் உள்ளிட்ட படங்களில் கதாநாயகியாக நடித்தவர் குட்டி ராதிகா.

தமிழில் இயற்கை, வர்ணஜாலம், மீசை மாதவன் உள்ளிட்ட படங்களில் கதாநாயகியாக நடித்தவர் குட்டி ராதிகா. பெங்களூருவை சேர்ந்த இவர் அதிகமான கன்னட படங்களிலும் நடித்துள்ளார். குட்டி ராதிகாவை கர்நாடக முன்னாள் முதல் மந்திரி குமாரசாமி 2-வது திருமணம் செய்து கொண்டார். தற்போது இருவரும் பிரிந்து வாழ்கிறார்கள்.

இந்த நிலையில் அரசு வேலை வாங்கி தருவதாக பண மோசடி செய்து கைதாகி உள்ள ஜோதிடர் யுவராஜ் சாமி என்பவர் அளித்துள்ள வாக்குமூலத்தில் குட்டி ராதிகாவுக்கு ரூ.1 கோடியே 50 லட்சம் கொடுத்ததாக தெரிவித்து உள்ளார். இந்த குற்றச்சாட்டை குட்டி ராதிகா மறுத்துள்ளார். 

முன்னாள் முதல் மந்திரி குமாரசாமியிடம் மோசடி புகாரில் கைதான யுவராஜ் நடிகை குட்டி ராதிகாவுக்கு ரூ.1 கோடியே 50 லட்சம் கொடுத்ததாக சொல்லி இருப்பது குறித்து உங்கள் கருத்து என்ன? என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த குமாரசாமி நடிகை குட்டி ராதிகா யார்?. அவர் யார் என்றே எனக்கு தெரியாது. தெரியாதவர்களை பற்றி நான் எதற்காக கவலைப்பட வேண்டும் என்று கோபத்தோடு கூறினார். இந்த பதில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.