சினிமா செய்திகள்

நடிகை மோனல் கஜ்ஜாரின் கஷ்ட அனுபவங்கள் + "||" + Actress Monal Khajjar's difficult experiences

நடிகை மோனல் கஜ்ஜாரின் கஷ்ட அனுபவங்கள்

நடிகை மோனல் கஜ்ஜாரின் கஷ்ட அனுபவங்கள்
வாழ்க்கையில் ஏற்பட்ட கஷ்டங்கள் குறித்து நடிகை மோனல் கஜ்ஜார் பேட்டிஅளித்தார்.

தமிழில் விக்ரம்பிரபு ஜோடியாக சிகரம் தொடு, கிருஷ்ணாவுடன் வானவராயன் வல்லவராயன் ஆகிய படங்களில் நடித்தவர் மோனல் கஜ்ஜார். இந்தி, தெலுங்கு படங்களிலும் நடித்து இருக்கிறார். சமீபத்தில் தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். தற்போது அவருக்கு மேலும் பட வாய்ப்புகள் குவிகின்றன. 

வாழ்க்கையில் ஏற்பட்ட கஷ்டங்கள் குறித்து மோனல் கஜ்ஜார் அளித்துள்ள பேட்டியில் கூறும்போது,“எனது தந்தை இறந்ததும் சம்பாதிக்க வேண்டிய நிர்ப்பந்தம் எனக்கு ஏற்பட்டது. இதனால் 15 வயதிலேயே வேலை பார்க்க ஆரம்பித்தேன். சர்வேயராக இருந்தேன். பின்னர் வங்கியில் வேலை பார்த்தேன். அதன்பிறகு மாடலிங் செய்ய தொடங்கி விளம்பர படங்களில் நடித்து சினிமாவுக்கு வந்தேன். 

என் வாழ்க்கையில் பல போராட்டங்களை சந்தித்து இருக்கிறேன். இளமை பருவம் வேலைகளில் நகர்ந்தது. அந்த அனுபவத்தில் இருந்துதான் எனக்குள் நடிப்பை கொண்டு வருகிறேன். நடிப்பு இதயத்தில் இருந்து வரவேண்டும். சினிமாவில் வெற்றி பெற தியாகங்கள் செய்ய வேண்டும்’’ என்றார்.