சினிமா செய்திகள்

"ரசிகர்களுக்கு மாஸ்டர் பொங்கல்" - மாஸ்டர் திரைப்படம் நடிகர் சூரி கருத்து + "||" + Master Pongal actor Suri commented to the fans

"ரசிகர்களுக்கு மாஸ்டர் பொங்கல்" - மாஸ்டர் திரைப்படம் நடிகர் சூரி கருத்து

"ரசிகர்களுக்கு மாஸ்டர் பொங்கல்" - மாஸ்டர் திரைப்படம் நடிகர் சூரி கருத்து
நடிகர் விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படம் மதுரை மாவட்டத்தில் உள்ள 40 திரையரங்குகளில் இன்று வெளியானது.
மதுரை,

நடிகர் விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படம்  மதுரை மாவட்டத்தில் உள்ள 40 திரையரங்குகளில் இன்று வெளியானது. மாஸ்டர் திரைப்படத்தின் முதல் காட்சி ரசிகர்களுக்கு என பிரத்யேகமாக திரையிடப்பட்டது. கொரோனா பரவல் கட்டுப்பாடு காரணமாக ரசிகர்களின் கொண்டாட்டம் குறைந்த அளவே இருந்தது. செல்லூர், ஆரப்பாளையம், கே.கே.நகர் அண்ணாநகர் மற்றும் புறநகர் பகுதிகளான திருநகர், திருமங்கலம், உசிலம்பட்டி, மேலூர், சோழவந்தானில்  உள்ள திரையரங்குகளில் முதற்காட்சிகள் காலை 4 மணிக்கு திரையிடப்பட்டது. முக கவசம் அணிந்த பார்வையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். ரசிகர்கள் காட்சியை தொடர்ந்து ஆன்லைன் மூலமாக புக்கிங் செய்த ரசிகர்களுக்காக அடுத்த காட்சி திரையிடப்பட்டது. மாஸ்டர் திரைப்படத்தை பார்த்த பின் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் சூரி  படம் மாஸாக உள்ளதாக தெரிவித்தார்.