சினிமா செய்திகள்

சர்ச்சையில் சிக்கிய விஜய் சேதுபதி படம் + "||" + Embroiled in controversy Vijay Sethupathi film

சர்ச்சையில் சிக்கிய விஜய் சேதுபதி படம்

சர்ச்சையில் சிக்கிய விஜய் சேதுபதி படம்
விஜய்சேதுபதி நடித்துள்ள புதிய படம் துக்ளக் தர்பார். பார்த்திபன், மஞ்சிமா மோகன், ராஷி கண்ணா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் வருகிறார்கள்.
இந்த படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது. அதில் பார்த்திபன் ராசிமான் கதாபாத்திரத்தில் நடித்துள்ள காட்சிகளும் அவரது போஸ்டர்களை கிழிப்பது போன்ற காட்சிகளும் இடம்பெற்று உள்ளன. சீமானை கேலி செய்வதுபோல் இந்த காட்சிகள் உள்ளதாக நாம் தமிழர் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். படத்தை திரையிட விடமாட்டோம் என்றும் எச்சரித்துள்ளனர். இந்த சர்ச்சைக்கு விளக்கம் அளித்து நடிகர் பார்த்திபன் டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், “நண்பர் சீமானிடம் நேரிடையாக துக்ளக் தர்பார் குறித்து விளக்கமளித்து விட்டேன். அவரும் பெருந்தன்மையாக பதில் அளித்தார். ராசிமான் என்ற பெயர் சீண்ட வேண்டுமென்று வைக்கப்பட்டதல்ல. இருந்திருந்தால் அதற்கு நானே இடந்தந்திருக்க மாட்டேன். இந்த நிமிடம் வரை நான் எந்த கட்சியையும் சார்ந்தவனல்ல. இடையராது உழைத்து தங்களின் லட்சிய இலக்கை அடைய போராடும் நாம் தமிழர் தோழர்களின் முயற்சிகளை கிண்டல் செய்ய இடம் தரமாட்டேன். உள்நோக்கமின்றி நடந்த பெயர் பிரச்சினையை இயக்குனரிடம் கூறி ராசிமான் என்ற பெயரை மாற்ற முயற்சி செய்து வருகிறேன்’' என்று கூறியுள்ளார்.