சினிமா செய்திகள்

நடிகைகள் பட வாய்ப்புக்கு திருமணம் தடையல்ல - சுருதிஹாசன் + "||" + Actresses for film opportunity Marriage is not a barrier Surudihasan

நடிகைகள் பட வாய்ப்புக்கு திருமணம் தடையல்ல - சுருதிஹாசன்

நடிகைகள் பட வாய்ப்புக்கு திருமணம் தடையல்ல - சுருதிஹாசன்
சுருதிஹாசன் சில வருட இடைவெளிக்கு பிறகு மீண்டும் நடிக்க தொடங்கி உள்ளார்.
தமிழ், தெலுங்கு, இந்தி படங்கள் கைவசம் உள்ளன. சமீபத்தில் தெலுங்கில் நடித்த கிராக் படம் வெளியானது. சுருதிஹாசன் அளித்துள்ள பேட்டி வருமாறு:-

“நான் சில காலம் நடிக்காமல் இருந்தாலும் இசை பணிகளில் ஈடுபட்டு வந்தேன். படங்களில் இடைவெளி ஏற்பட்டால் எல்லோருக்கும் நாம் பின் தங்கி விடுவோமோ என்ற பயம் இருக்கும். ஆனால் எனக்கு இல்லை. அதற்கு காரணம் ரசிகர்கள். தமிழ், தெலுங்கு ரசிகர்கள் என்மீது வைத்துள்ள அன்பு மாறவில்லை. அவர்கள் குடும்ப உறுப்பினராக என்னை பார்க்கிறார்கள். நாம் கஷ்டப்பட்டு உழைத்தால் கடவுளும் ரசிகர்களும் நம்மை பார்த்துக்கொள்வார்கள். புத்தாண்டில் முன்பைவிட இன்னும் என்னை மெருகேற்றிக்கொள்ள வேண்டும் என்று நினைத்து இருக்கிறேன். இப்போது சவாலான கதாபாத்திரங்களில் நடிக்க தைரியம் வந்துள்ளது. நடிகைகள் திருமணம் செய்து குழந்தை பெற்றாலும் பட வாய்ப்புகள் குறையாது. ஐஸ்வர்யாராய், கரினா கபூர் போன்றவர்கள் குழந்தை பெற்றும் இன்னும் அதிகமாக படங்களில் நடிக்கிறார்கள். அவர்கள் திருமணமாகும் நடிகைகளுக்கு முன் உதாரணமாக உள்ளனர்.''

இவ்வாறு சுருதிஹாசன் கூறினார்.