தியேட்டர் அதிபர்களுக்கு உதவிய சல்மான் கான்


தியேட்டர் அதிபர்களுக்கு உதவிய சல்மான் கான்
x
தினத்தந்தி 20 Jan 2021 10:30 PM GMT (Updated: 20 Jan 2021 8:36 PM GMT)

கொரோனாவால் தமிழ், தெலுங்கு, இந்தியில் முன்னணி நடிகர்களின் படங்கள் ஓ.டி.டி. தளங்களில் வெளியாகி தியேட்டர் உரிமையாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன.

சிறு பட்ஜெட் படங்களை பார்க்க ரசிகர்கள் வராததால் பெரிய நடிகர்கள் படங்களை தியேட்டர்களில் திரையிட அவர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். சமீபத்தில் விஜய்யின் மாஸ்டர் திரையரங்குகளில் வெளியாகி தியேட்டர் அதிபர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் இந்தியில் பிரபுதேவா இயக்கத்தில் சல்மான்கான் நடித்துள்ள ராதே படத்தை ஓ.டி.டி. தளத்துக்கு விற்று விட்டதாக தகவல் பரவியது. இது தியேட்டர் அதிபர்களை அதிரவைத்தது. இந்த நிலையில் சல்மான்கான் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தியேட்டர் உரிமையாளர்களின் பண கஷ்டம் எனக்கு புரிகிறது. ராதே படத்தை தியேட்டர்களில் வெளியிட்டு அவர்களுக்கு உதவ விரும்புகிறேன். தியேட்டர்களுக்கு வரும் ரசிகர்களுக்கு கொரோனா முன் எச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகளை தியேட்டர் அதிபர்கள் செய்ய வேண்டும். ஈகை திருநாளில் ராதே படம் தியேட்டர்களில் வெளியாகும்'' என்று கூறியுள்ளார்.

Next Story