சினிமா செய்திகள்

டைரக்டரான கதிரேசன் திகில் கதையில் லாரன்ஸ், பிரியா பவானி சங்கர் + "||" + Director Kathiresan In the horror story Lawrence, Priya Bhavani Shankar

டைரக்டரான கதிரேசன் திகில் கதையில் லாரன்ஸ், பிரியா பவானி சங்கர்

டைரக்டரான கதிரேசன் திகில் கதையில் லாரன்ஸ், பிரியா பவானி சங்கர்
ராகவா லாரன்ஸ் இந்தியில் காஞ்சனா படத்தின் ரீமேக்காக அக்‌ஷய்குமாரை வைத்து இயக்கிய லட்சுமி படம் சமீபத்தில் ஓ.டி.டி தளத்தில் வெளியானது.
அடுத்து சந்திரமுகி 2 படத்தில் நடிப்பதாக இருந்தது. பட்ஜெட் காரணங்களால் அந்த படத்தை இன்னும் தொடங்கவில்லை.

இதையடுத்து ருத்ரன் என்ற பெயரில் தயாராகும் புதிய படத்தில் நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இதில் நாயகியாக நடிக்க பிரியா பவானி சங்கரை தேர்வு செய்தனர். டைரக்டர் யார் என்பதை வெளியிடாமல் இருந்தனர்.

இந்தநிலையில் ருத்ரன் படத்தை தயாரிப்பாளர் எஸ்.கதிரேசன் இயக்குவதாக நேற்று அறிவிக்கப்பட்டது. இவர் தனுஷ் நடித்த பொல்லாதவன், ஆடுகளம் மற்றும் ஜிகர்தண்டா உள்ளிட்ட படங்களை தயாரித்துள்ளார். ருத்ரன் படம் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். படத்தை அவரே தயாரிக்கவும் செய்கிறார். இதில் நாசர், பூர்ணிமா பாக்யராஜ் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறார்கள். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். ருத்ரன் திகில் கதையம்சம் உள்ள படமாக தயாராகிறது. இதன் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி உள்ளது.