சினிமா செய்திகள்

பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா ஜோடியாக பிரியங்கா மோகன் + "||" + In the Pandiraj movie Surya paired up Priyanka Mohan

பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா ஜோடியாக பிரியங்கா மோகன்

பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா ஜோடியாக பிரியங்கா மோகன்
சூர்யாவின் சூரரை போற்று படம் சமீபத்தில் ஓ.டி.டி தளத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.
 தொடர்ந்து சூர்யா, கவுதம் மேனன் இயக்கத்தில் நவரசா என்ற இணையதள படத்தில் நடித்தார். அடுத்து வெற்றிமாறன் இயக்கும் வாடிவாசல் படத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது சூரி கதாநாயகனாக நடிக்கும் படத்தை வெற்றி மாறன் இயக்க உள்ளதால் பாண்டிராஜ் இயக்கும் படத்தில் நடிக்க சூர்யா தயாராகி உள்ளார். இது கிராமத்து கதையம்சத்தில் அதிரடி படமாக தயாராகிறது. இதில் சூர்யா ஜோடியாக நடிக்கும் நடிகை தேர்வு நடந்தது. ஏற்கனவே ராஷ்மிகா மந்தனா நடிக்க இருப்பதாக கூறப்பட்டது. இந்த நிலையில் தற்போது நடிகை பிரியங்கா மோகனை ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர் நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள டாக்டர் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். தெலுங்கில் நானி ஜோடியாக கேங்க் லீடர் படத்திலும், கன்னட படமொன்றிலும் ஏற்கனவே பிரியங்கா மோகன் நடித்து இருக்கிறார். சூர்யா படத்தின் ஆரம்பகட்ட பணிகள் நடக்கின்றன. படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்க உள்ளது.