சினிமா செய்திகள்

மேலும் 2 படங்களில் வில்லனாக விஜய் சேதுபதி + "||" + Vijay Sethupathi as the villain in 2 more films

மேலும் 2 படங்களில் வில்லனாக விஜய் சேதுபதி

மேலும் 2 படங்களில் வில்லனாக விஜய் சேதுபதி
நடிகர் விஜய் சேதுபதி மேலும் 2 படங்களில் வில்லனாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் பட உலகில் முன்னணி கதாநாயகனாக இருக்கும் விஜய்சேதுபதி வில்லன், முதியவர், திருநங்கை கதாபாத்திரங்களில் இமேஜ் பார்க்காமல் நடித்து வருகிறார். பிறமொழி படங்களிலும் அவருக்கு வாய்ப்புகள் குவிகின்றன.

பொங்கல் பண்டிகையில் திரைக்கு வந்த விஜய்யின் மாஸ்டர் படத்திலும் வில்லனாக வந்தார். அவரது கதாபாத்திரத்துக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்தது. ஏற்கனவே ரஜினிகாந்தின் பேட்ட மற்றும் விக்ரம், வேதா படங்களிலும் வில்லனாக நடித்து இருந்தார்.

தற்போது மாஸ்டர் படத்தை இந்தியில் ரீமேக் செய்யும் முயற்சிகள் நடக்கின்றன. இதில் விஜய் கதாபாத்திரத்தில் ஹிருத்திக் ரோஷன் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. விஜய்சேதுபதியின் வில்லன் வேடத்தில் விஜய்சேதுபதியையே நடிக்க வைக்க இந்தி மாஸ்டர் படக்குழுவினர் ஆலோசிக்கின்றனர். இதுபோல் பிரபாஸ் கதாநாயகனாக நடிக்க தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் தயாராகும் சலார் படத்திலும் விஜய்சேதுபதியை வில்லனாக நடிக்க வைக்க பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.