சினிமா செய்திகள்

படப்பிடிப்பில் புகுந்து விவசாயிகள் போராட்டம் + "||" + Get into the shooting Farmers struggle

படப்பிடிப்பில் புகுந்து விவசாயிகள் போராட்டம்

படப்பிடிப்பில் புகுந்து விவசாயிகள் போராட்டம்
தமிழில் நயன்தாரா நடித்த கோலமாவு கோகிலா படம் இந்தியில் குட்லக் ஜெர்ரி என்ற பெயரில் ரீமேக் ஆகிறது. இதில் நயன்தாரா வேடத்தில் மறைந்த நடிகை ஶ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் நடிக்கிறார்.
சமீபத்தில் குட்லக் ஜெர்ரி படப்பிடிப்பு பஞ்சாப் மாநிலம் பாஸி பதானா நகரில் நடந்தபோது விவசாயிகள் போராட்டம் நடத்தினர். வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடும் விவசாயிகளுக்கு இந்தி நடிகர், நடிகைகள் ஆதரவு தெரிவிக்கவில்லை என்று கண்டன கோஷங்கள் எழுப்பினர். இதனால் படப்பிடிப்பு தடைபட்டது.

தற்போது பாட்டியாலாவில் உள்ள பூபிந்தரா பகுதியில் குட்லக் ஜெர்ரி படப்பிடிப்பு நடந்து வருகிறது அங்கும் விவசாயிகள் திடீரென்று கூடினர். படப்பிடிப்பு தளத்தை முற்றுகையிட்டு அவர்கள் போராட்டம் நடத்தினர். ஜான்விகபூரை திரும்பி செல்லும்படி கோஷமிட்டனர். இதையடுத்து படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.

ஜான்வி கபூர் உள்ளிட்ட நடிகர், நடிகைகள் பாதுகாப்பாக ஓட்டலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஓட்டல் முன்பும் விவசாயிகள் கூடி போராட்டம் நடத்தினர். போலீசார் விரைந்து வந்து ஜான்வி கபூருக்கு பாதுகாப்பு அளித்தனர்.