சினிமா செய்திகள்

ஓ.டி.டி. தளங்களை ஆதரித்த வித்யா பாலன் + "||" + Vidya Balan supported the OTT

ஓ.டி.டி. தளங்களை ஆதரித்த வித்யா பாலன்

ஓ.டி.டி. தளங்களை ஆதரித்த வித்யா பாலன்
கொரோனாவால் தமிழ், தெலுங்கு, இந்தியில் தயாரான புதிய படங்கள் ஓ.டி.டி. தளங்களில் வெளியாகி வருகின்றன.
இதற்கு தியேட்டர் அதிபர்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். ஏற்கனவே சூர்யாவின் சூரரை போற்று, விஜய்சேதுபதியின் க./பெ. ரணசிங்கம், ஜெயம் ரவியின் பூமி, நயன்தாரா நடித்த மூக்குத்தி அம்மன், கீர்த்தி சுரேசின் பென்குயின், சந்தானம் நடித்துள்ள பிஸ்கோத்தே உள்ளிட்ட பல படங்கள் ஓ.டி.டி.யில் வெளியிடப்பட்டன.

இந்தியில் 10-க்கும் மேற்பட்ட படங்கள் ஓ.டி.டி.யில் வந்துள்ளன. மலையாளத்தில் மோகன்லால், மீனா நடித்துள்ள திரிஷ்யம் 2 படமும் ஓ.டி.டி.யில் வெளியாக உள்ளது. படங்களை ஓ.டி.டி.யில் வெளியிடுவதை தமிழில் நேர்கொண்ட பார்வை படத்தில் அஜித்குமார் ஜோடியாக நடித்துள்ள பிரபல இந்தி நடிகை வித்யாபாலன் வரவேற்று உள்ளார். வித்யாபாலன் கூறும்போது, “ஓ.டி.டி. தளங்கள் மீது எனக்கு ஈடுபாடு உண்டு. நடிகர், நடிகைகள் உள்ளிட்ட பலரது வாழ்க்கையை ஓ.டி.டி. தளங்கள் காப்பாற்றும். புதிய படங்களை வெளியிட தியேட்டர்கள் கிடைக்காதவர்களுக்கு ஓ.டி.டி. தளங்கள் கைகொடுக்கும். நான் ஓ.டி.டி. தொடர்களில் நடிக்கலாம் என்று இருக்கிறேன். உரிய நேரத்தில் அதை செய்வேன்'' என்றார்.