சினிமா செய்திகள்

ஆஸ்கார் விருது போட்டிக்கு செல்லும் சூர்யாவின் சூரரைப்போற்று + "||" + Surya's champion goes to the Oscars

ஆஸ்கார் விருது போட்டிக்கு செல்லும் சூர்யாவின் சூரரைப்போற்று

ஆஸ்கார் விருது போட்டிக்கு செல்லும் சூர்யாவின் சூரரைப்போற்று
சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள சூரரைப்போற்று படம் ஆஸ்கார் விருது போட்டியில் பங்கேற்கிறது.
சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள சூரரைப்போற்று படம் ஆஸ்கார் விருது போட்டியில் பங்கேற்கிறது. இந்த படம் ஓ.டி.டி.யில் வெளியானது. கொரோனா காரணமாக ஓ.டி.டி.யில் வெளியான படங்களும் ஆஸ்கார் போட்டியில் பங்கேற்கும் வகையில் விதிமுறைகளில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளன. அந்த வகையில் ஆஸ்கார் போட்டிக்கான பொதுப்பிரிவில் சூரரைப்போற்று படம் சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த இயக்குனர், சிறந்த இசையமைப்பாளர், சிறந்த கதாசிரியர் உள்ளிட்ட அனைத்து பிரிவுகளிலும் போட்டியிடுகிறது.


இதில் தேர்வாகி இறுதி போட்டியில் பங்கேற்க வேண்டும். அதிலும் தேர்வானால் ஆஸ்கார் விருது பரிந்துரை பட்டியலில் இடம்பெறும். பின்னர் ஆஸ்கார் மேடையில் வெற்றி பெற்றதை அறிவிப்பார்கள்.

ஆஸ்காருக்கு செல்லும் சூரரைப்போற்று படத்தை பொதுப்பிரிவு போட்டியில் திரையிடுவதற்காக ஆஸ்கார் அகாடமி திரையில் பதிவேற்றம் செய்துள்ளனர். அங்கு ஆஸ்கார் விருது உறுப்பினர்கள் பலரும் பார்த்து எந்த பிரிவுகளில் போட்டியிட படத்தை தேர்வு செய்யலாம் என்று முடிவு செய்வார்கள். ஏற்கனவே இந்த படம் கோல்டன் குளோப் விருதுக்கான திரையிடலுக்கும் தேர்வானது நினைவுகூரத்தக்கது.