சினிமா செய்திகள்

அருண் விஜய்யின் 5 படங்கள் + "||" + 5 pictures of Arun Vijay

அருண் விஜய்யின் 5 படங்கள்

அருண் விஜய்யின் 5 படங்கள்
அருண் விஜய்க்கு ‘குற்றம் 23' திருப்புமுனை படமாக அமைந்தது. இந்த படம் நல்ல வசூலும் பார்த்தது.
அருண் விஜய்க்கு ‘குற்றம் 23' திருப்புமுனை படமாக அமைந்தது. இந்த படம் நல்ல வசூலும் பார்த்தது. அதன்பிறகு மணிரத்னம் இயக்கிய ‘செக்கசிவந்த வானம்' படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதிலும் திறமையை வெளிப்படுத்தினார். கடந்த வருடம் அருண் விஜய் நடிப்பில் மாபியா என்ற அதிரடி படம் வெளியானது. தற்போது ஹரி இயக்கும் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. ஏற்கனவே சூர்யாவை வைத்து அருவா படத்தை இயக்க ஹரி தயாரான நிலையில் அந்த படம் திடீரென்று கைவிடப்பட்டதால் அருண் விஜய்யுடன் கூட்டணி சேர்ந்துள்ளார். மேலும் ஜி.என்.ஆர்.குமரவேலன் இயக்கத்தில் சினம் படத்தில் அருண் விஜய் நடித்து வந்தார். இந்த படம் முடிந்து தணிக்கையில் யூஏ சான்றிதழ் பெற்றுள்ளது. பாக்ஸர், அக்னி சிறகுகள் ஆகிய படங்களும் கைவசம் உள்ளன. இந்த நிலையில் சூர்யா தயாரிக்கும் குழந்தைகள் படத்தில் நடிக்கவும் ஒப்பந்தமாகி உள்ளார். சரவ் சண்முகம் இயக்கும் இந்த படத்தில் அருண் விஜய்யின் மகன் அர்னவும் நடிகராக அறிமுகமாகிறார். கதாபாத்திரம் பிடித்ததால் இதில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. கோடையில் வரும் படங்கள்
கொரோனாவால் தமிழில் தயாரான பெரிய பட்ஜெட் படங்கள் சில காட்சிகள் மட்டுமே படமாக்க வேண்டி இருந்த நிலையில் முடங்கின. ஊரடங்கை தளர்த்தியபின் இவற்றின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.