சினிமா செய்திகள்

கதாநாயகியாக நடிக்கும் வனிதா + "||" + Vanitha who plays the heroine

கதாநாயகியாக நடிக்கும் வனிதா

கதாநாயகியாக நடிக்கும் வனிதா
வனிதாவுக்கு புதிய படத்தில் கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு வந்துள்ளது. இது கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதையம்சம் கொண்ட படம் என்றும் படத்துக்கு அனல் காற்று என்றும் பெயர் வைத்துள்ளனர் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
நடிகை வனிதா விஜயகுமாருக்கு ஏற்கனவே 2 முறை திருமணம் ஆகி விவாகரத்தில் முடிந்தது. அவருக்கு ஒரு மகனும், 2 மகள்களும் உள்ளனர். இந்தநிலையில் மனைவியை விவாகரத்து செய்யாத பீட்டர்பால் என்பவரை காதலித்து சமீபத்தில் 3-வது திருமணம் செய்து கொண்டார். இது சர்ச்சையை கிளப்பியது. வனிதாவுடன் நடிகைகள் சிலர் கடுமையாக மோதவும் செய்தனர். பின்னர் பீட்டர் பால், குடிபோதைக்கு அடிமையாக இருப்பதாக சொல்லி கண்ணீர் விட்டு அழுது அவரை உதறினார். இந்தநிலையில் வனிதா மீண்டும் சினிமாவில் நடிக்க வருகிறார். ஏற்கனவே 1995-ல் விஜய்யின் சந்திரலேகா படத்தில் வனிதா அறிமுகமானார். அதன்பிறகு வனிதா நடித்த சில படங்கள் சரியாக ஓடாததால் திருமணம் செய்து கொண்டு சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்தார். பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமானார். இப்போது வனிதாவுக்கு புதிய படத்தில் கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு வந்துள்ளது. இது கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதையம்சம் கொண்ட படம் என்றும் படத்துக்கு அனல் காற்று என்றும் பெயர் வைத்துள்ளனர் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. இதில் நடிப்பதற்காக வனிதா உடலை குறைத்து இருக்கிறார்.

தொடர்புடைய செய்திகள்

1. மீண்டும் காதலில் வனிதா?
நடிகை வனிதா ஏற்கனவே நடிகர் ஆகாஷை மணந்து 2007-ல் விவாகரத்து செய்தார். பின்னர் ராஜன் ஆனந்த் என்பவரை 2-வது திருமணம் செய்து அவரையும் 2012-ல் விவாகரத்து செய்து பிரிந்தார்.