சினிமா செய்திகள்

மீண்டும் காதலில் சுருதிஹாசன்? + "||" + Surudihasan in love again?

மீண்டும் காதலில் சுருதிஹாசன்?

மீண்டும் காதலில் சுருதிஹாசன்?
சுருதிஹாசனை சாந்தனு ஹசாரிகா கட்டிப்பிடித்தபடி இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார். இதன்மூலம் சுருதிஹாசன் மீண்டும் காதல் உறுதிபடுத்தப்பட்டு இருப்பதாக ரசிகர்களும் திரையுலகினரும் பேசத்தொடங்கி உள்ளனர்.
நடிகை சுருதிஹாசனும், லண்டனை சேர்ந்த நாடக நடிகர் மைக்கேல் கார்சேலும் ஏற்கனவே காதலித்தனர். மைக்கேலை இந்தியாவுக்கு அழைத்து வந்து பெற்றோர்களிடம் சுருதிஹாசன் அறிமுகம் செய்து வைத்த புகைப்படங்கள் வெளியானது. தொடர்ந்து சினிமாவில் நடிப்பதிலும் ஆர்வம் இல்லாமல் இருந்தார். இதனால் இருவருக்கும் திருமணம் நடக்கலாம் என்று எதிர்பார்த்த நிலையில் 2019-ல் திடீரென்று கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தார்கள். அதன்பிறகு படங்களில் நடிக்க தொடங்கினார். இந்த நிலையில் சுருதிஹாசன் டெல்லியை சேர்ந்த ‘டூடுல்’ கலைஞர் சாந்தனு ஹசாரிகாவை காதலிப்பதாக இணையதளங்களில் தகவல் பரவி வருகிறது. இருவரும் கைகோர்த்தபடி மும்பையில் உள்ள ஓட்டலுக்கு சென்று விட்டு வெளியே வரும் வீடியோவும் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகிறது. சுருதிஹாசனை சாந்தனு ஹசாரிகா கட்டிப்பிடித்தபடி இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார். இதன் மூலம் சுருதிஹாசன் சாந்தனு ஹசாரிகா காதல் உறுதிபடுத்தப்பட்டு இருப்பதாக ரசிகர்களும் திரையுலகினரும் பேசத்தொடங்கி உள்ளனர்.