சினிமா செய்திகள்

கவர்ச்சி புகைப்படம் கேட்ட ரசிகர்களை திட்டிய லட்சுமி மேனன் + "||" + Lakshmi Menon scolds fans for asking sexy photo

கவர்ச்சி புகைப்படம் கேட்ட ரசிகர்களை திட்டிய லட்சுமி மேனன்

கவர்ச்சி புகைப்படம் கேட்ட ரசிகர்களை திட்டிய லட்சுமி மேனன்
தமிழில் கும்கி, சுந்தரபாண்டியன், பாண்டிய நாடு, மஞ்சப்பை, ஜிகர்தண்டா, கொம்பன், வேதாளம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள லட்சுமி மேனன் இப்போது படங்களில் நடிப்பதை குறைத்து படிப்பு, நடனத்தில் கவனம் செலுத்தி வருகிறார்.
தமிழில் கும்கி, சுந்தரபாண்டியன், பாண்டிய நாடு, மஞ்சப்பை, ஜிகர்தண்டா, கொம்பன், வேதாளம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள லட்சுமி மேனன் இப்போது படங்களில் நடிப்பதை குறைத்து படிப்பு, நடனத்தில் கவனம் செலுத்தி வருகிறார்.

அவர், சமூக வலைத்தளத்தில் சர்ச்சை கருத்துக்கள் பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். பிக்பாஸில் கலந்து கொள்வதாக தகவல் கசிந்தபோது, பிக்பாஸ் அரங்கில் மற்றவர்கள் பயன்படுத்திய கழிவறையை கழுவ முடியாது, நான் அங்கு செல்ல மாட்டேன் என்று பேசி சர்ச்சையில் சிக்கினார். சமீபத்தில் யாரையாவது திருமணம் செய்து சினிமாவை விட்டு விலகுங்கள் என்று அறிவுரை சொன்ன ரசிகரை வலைத்தளத்தில் பதிலடி கொடுத்து சாடினார். தற்போது மீண்டும் ரசிகர்களுடன் வலைத்தளத்தில் கலந்துரையாடியபோது ரசிகர்கள் அவரது கவர்ச்சி புகைப்படங்களை கேட்டனர். அதை பார்த்த லட்சுமிமேனன் எல்லோரும் ஒரே மாதிரி கேள்விகளை கேட்பது போரடிக்கிறது என்று சொல்லி கெட்டவார்த்தையால் திட்டினார். இது ரசிகர்களுக்கு அதிர்ச்சியையும், சமூக வலைத்தளத்தில் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. ஓ.பன்னீர்செல்வம் தாயாரிடம் ஆசிபெற்ற முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சமூக வலைத்தளங்களில் வைரலாகும் புகைப்படம்
ஓ.பன்னீர்செல்வம் தாயாரிடம் ஆசிபெற்ற முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சமூக வலைத்தளங்களில் வைரலாகும் புகைப்படம்.
2. வைரலாகும் புகைப்படம் நடிகை நயன்தாராவுக்கு திருமண நிச்சயதார்த்தம்?
நயன்தாராவும் இயக்குனர் விக்னேஷ் சிவனும் தமிழ் பட உலகில் பரபரப்பாக பேசப்படும் காதல் ஜோடியாக வலம் வருகிறார்கள்.
3. வைரலாகும் புகைப்படம் புளிய மரத்தில் தொங்கிய கார்த்தி
நடிகர் கார்த்தி இயற்கையோடு ஒன்றிய வாழ்க்கையில் விருப்பம் உள்ளவர். இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் கருத்துக்களையும் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வருகிறார்.